Monday, October 11, 2010

ஸமூது கூட்டத்தாரின் குகை இல்லங்கள்.

குர்ஆனில் கூறப்படும் ஸமூது கூட்டத்தாரின் குகை இல்லங்கள்.
Madain Saleh ( other name Al-Hijr), located in the Al Madinah Region, Saudi Arabia.


இறைவேதமாம் அல்குர்ஆனில் தெரிவிக்கப்படும் மற்றுமோர் சான்று’குகை இல்லங்கள்’ ஆகும்சவூதி அரேபியாவின் வடமேற்குப்பகுதியில் மதீனாவிலிருந்து ”தபூக்” செல்லும் வழியில் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகரம் ”அல்உலா” ஆகும். அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ” ஹிஜ்ர்” என்னும் மலைநாட்டை தலைநகராகக் கொண்டு வாழ்ந்தனர் தமூத் சமூகத்தினர்.

செல்வச் செழிப்புடன் வாழ்ந்த இந்த சமூகத்தினர், சிற்பக்கலையில் சிறந்து விளங்கினர்.மாடமாளிகைகளை எழுப்பியும், மலைப்பாறைகளை குடைந்து வீடுகள் அமைத்தும் வாழ்ந்து வந்தனர். அவர்களின் அந்த குகைஇல்லங்கள் அமைந்த நகரை இன்று ‘ மதாயின் ஸாலிஹ் என்றழைக்கின்றனர்.





நட்சத்திர ஓட்டல்களைப் போல அவர்கள் அமைத்திருக்கும் இல்லங்கள் காண்போரை வியப்பிலாழ்த்து கின்றன. ஆறாயிரம் ஆண்டுகள் சென்றும், இன்னமும் அதன் பொலிவான தோற்றம் இளமை குன்றாதிருப்பது அங்கு சென்று பார்த்து வருவோரை அதிசயிக்க வைக்கின்றன.

செல்வச் செருக்கில் சிந்தைகெட்டு தம் மனோ இச்சைப்படி வாழ்ந்து, கல்லையே கடவுளாகக் கொண்டு வணங்கி வந்த இந்த சமூகத்தின ருக்கு இறைநம்பிக்கையைப் போதிப்பதற்காக நபி ஸாலிஹ் (அலை) அவர்களை இறைவன் தமது தூதராக அனுப்பியருளினான்.

ஸாலிஹ் நபியவர்கள் எடுத்துரைத்த சத்திய நெறியினை தமூது இனத்தினர்,ஏற்றிட மறுத்ததுடன் இறைதூதரை ‘பைத்தியக்காரர்’ என்றும் பழித்தனர்.அத்துடன் ஸாலிஹ் நபியையும் அவர்களின் ஆதரவாளர் களையும் அடியோடு ஒழித்திடச் சதித் திட்டமும் தீட்டினர். அவர்களது அநியாயச் செயல்களும், அக்கிரமங்களும் அடுக்கடுக்காய்த் தொடர்வதைக் கண்டு பொறுமையின் எல்லையைத் தாண்டிய இறையருள் பொங்கிச் சினந்தெழுந்தது.

‘தங்களை யாராலும், எந்தவித இயற்கைச் சக்திகளாலும் அழிக்கமுடியாது’ என்ற இறுமாப்பில், மலைகளை குடைந்து பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர். அவ்வாறிருந்தும் இறைவனின் தண்டனையிலிருந்து அவர்களால் தப்ப முடியாமல் அழிந்ததையும் திருக்குர்ஆன் பல இடங்களில் வர்ணிக்கிறது.

عَادًا وَثَمُودَ وَقَد تَّبَيَّنَ لَكُم مِّن مَّسَاكِنِهِمْ ۖ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ وَكَانُوا مُسْتَبْصِرِينَ ﴿٣٨﴾

இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும் அழித்தோம்); அன்றியும் அவர்கள் வசித்த இடங்களிலிருந்து (ஒரு சில சின்னங்கள்) உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன ஏனெனில் ஷைத்தான் அவர்களுடைய (தீச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும், அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விட்டான். (AL ANKABOOT-38)

And [We destroyed] 'Aad and Thamud, and it has become clear to you from their [ruined] dwellings. And Satan had made pleasing to them their deeds and averted them from the path, and they were endowed with perception. (AL ANKABOOT-38)


பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) (AL FAJR_9)

’அவர்களது இல்லங்களிலிருந்தே இது உங்களுக்கு நன்கு விளங்கும்.’ என்று திருமறை சுட்டிக்காட்டுவதால் அவர்களது இல்லங்கள், அவர்களது அழிவை மெய்படுத்தும் சான்றுகளாக இன்றும் நிலைத்திருக்கின்றன என்பதை அறியமுடிகிறது.

No comments:

Post a Comment