Sunday, May 26, 2019

நேர்வழி என்பது இறைவனின் கையில், சித்தத்தில் உள்ள விடயம

Lafees Shaheed
2019-05-26

ரமழான் மாதம் 21 ஆம் நாளன்று தான் இறைத்தூதரின் மருமகனும், முதல் தலைமுறை முஸ்லிம்களில் முதுகெலும்புகளில் ஒருவருமான அலி இப்னு அபூதாலிப் (ரழி) ஷஹாதத்தை (வீர மரணம்) எய்தினார். அரசியல் ரீதியான மாற்றுத் தரப்பாக உருவான கவாரிஜ்கள் பின்னர் மார்க்க ரீதியான பிளவாக அதனை மாற்றிக் கொண்டு அலி (ரழி) போன்ற சிரேஷ்ட நபித் தோழர்களையே காஃபிர்கள் என்று கூற ஆரம்பித்தார்கள். மட்டுமன்றி இஸ்லாமிய அரசுடன் முடிவற்ற போர்களிலும் இறங்கினர். அலி இப்னு அபூதாலிபிடம் கவாரிஜ்களைப் பற்றி பொது மக்கள் கேட்ட பொழுது 'நேற்று எம்முடன் இருந்த, இன்று எமக்கு எதிராக நிற்கும் எமது சகோதரர்கள்' என்றே குறிப்பிடப்பட்டார். இத்தனைக்கும் கவாரிஜ்கள் கொலை செய்யப்பட வேண்டிய காஃபிராக அலி (ரழி)யை பிரகடனப்படுத்தி இருந்தனர். ஆனால் போற்றத் தக்க ஆன்மீக பரிபக்குவம் கொண்டவரும், சிறந்த விவேகியுமான அலி (ரழி) அதனை உணர்ச்சிப் பெருக்கினால் அன்றி அறிவுபூர்வமாக கையாண்டார். அவருடைய ஆத்மீக மாட்சிமை உள்ள அளவில் நின்று ஞானத்தின் பரிபூரண மகுடத்தை அணியும் அளவுக்கு உயர்ந்து நின்றது. ஆனால் அலி (ரழி) ஆன்மீகத்தையும், அரசியல் போன்ற சமூக விவகாரங்களையும் பிரித்தே நோக்கினார். கவாரிஜ்களுடன் ஒரு உரையாடலையே நாடினார் அலி (ரழி). ஆனால் போர் வெறியர்களான கவாரிஜ்கள் அதற்கு இணங்கவில்லை. மூளையால் பின் தொடர வேண்டியவற்றை மூளையாலும், உணர்வால் அணுக வேண்டியவற்றை இதயத்தாலும் அணுகுவது தான் ஓரு பக்குவப்பட்ட ஆளுமைக்கு அழகு. அலி இப்னு அபூதாலிப் (ரழி) அனைத்து கோணங்களிலும் பரிபூரண ஆளுமையாக திகழ்ந்தார்.

பிறர் எம்மைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதை வைத்து மட்டும் நாம் பிறரை எடை போட முடியாது / கூடாது. ஏனெனில் அது பிறர் எம்மில் இலகுவாக தாக்கம் செலுத்தும் பலவீனமான மனவமைப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் ஒரு வலிய ஆன்மா புறச் சூழல் தாக்கத்தை சமன் செய்து தன்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடுகளை வகுத்துக் கொள்ளும். அலி (ரழி) தன்னை காஃபிர் என்று கூறிய கவாரிஜ்களை திருப்பி காஃபிர் என்று அழைக்கவில்லை. சுயகட்டுப்பாடு என்பது அறிஞனுக்கும், வீரனுக்கும் அவசியம். நாம் அலி (ரழி) அவர்களிடத்திலே கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களில் இது பிரதானமானது.

அலி (ரழி) யை கொலை செய்த காரிஜியின் பெயர் அப்துர் ரஹ்மான் இப்னு முல்ஜிம் (எவ்வளவு அழகான பெயர்! ஆனால் செய்த வேலை தான் வரலாற்றில் நிரந்தரக் கறையாக நின்று துர்வாசம் வீசக் கூடிய படுபாதகச் செயல்). வாளால் வெட்டும் பொழுது அந்த வெட்டு நபிகளாரின் கண்ணியமிக்க மருமகனின் முகத்தில் விழுந்தது. இதனால் அலியின் பெயரை சொல்லும் பொழுது எல்லாம் பின்னெட்டாக 'கர்ரமல்லாஹு வஜஅஹு' என்று சொல்லும் பழக்கம் இஸ்லாமிய மரபில் உருவானது. இதன் அர்த்தம் 'அல்லாஹ் அவருடைய முகத்தை கண்ணியப்படுத்தி வைக்கட்டும்' என்பது. இதொரு பிரார்த்தனை வடிவம். அல்லாஹ் அலி இப்னு அபூதாலிப் (ரழி) யை கண்ணியப்படுத்தி வைத்து இருக்கிறான் என்பதற்கு வரலாறு சாட்சி.

அலி (ரழி) யை கொன்ற இப்னு முல்ஜிம் சிறையிடப்பட்ட பொழுது 'நாவை மட்டும் அறுக்க வேண்டாம். ஏனென்றால் நான் இறைவனை தஸ்பீஹ் (துதி செய்தல்) செய்ய வேண்டும்' என்றானாம். அந்தளவுக்கு வணக்க வழிபாடுகளில் கவனம் கொண்டவர்கள் கவாரிஜ்கள். ஆனால் அலி (ரழி) யின் அந்தஸ்து பற்றிய அறிவின்மை அவனை உத்தம நபித் தோழரையே கொலை செய்யும் அளவுக்கு செல்ல வைத்தது. இதற்கு மாறாக அறிவில் உயர்ந்து நின்ற இப்லீஸ் தன்னுடைய கர்வம் காரணமாக ஆதம் நபிக்கு வழிபட மறுத்து இறை சாபத்தை பெற்று விண்ணகத்தை விட்டு வெளியேற்றப்பட்டான்.

இப்லீஸின் அறிவு, இப்னு முல்ஜிமின் அமல் (பக்திபூர்வமான வணக்க வழிபாடு) இரண்டுமே அவர்களுக்கு மீட்சியை அளிக்கவில்லை. ஆக நேர்வழி என்பது இறைவனின் கையில், சித்தத்தில் உள்ள விடயம். பயமும் எதிர்பார்க்ககையுமாக இறைவனை கடைசி வரை பிரக்ஞையுடன் வணங்கி வர வேண்டியதன் அவசியத்தை அலியின் போற்றத் தக்க வீர மரணம் எமக்கு உணர்த்துகிறது.

முதல் நிலை முஸ்லிம் ; மாபெரும் அறிஞன் ; கூர்மதி கொண்ட அரசியல் நிபுணர் ; ஆத்மீக ஞானி ; வீரரான அலி முர்தழா (ரழி) அவர்களை நினைவு கூர்கிறோம்!

#இஙகிருந்து அறிவோம்
#பாதையை_செப்பனிடல்

https://www.facebook.com/100005063134008/posts/1256155211229905/

Sunday, April 21, 2019

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் கொண்டாடலாமா?
++++++++++++++++++++++++++
எமக்கு மத்தியில் பேசப்படக்கூடிய நிறைய விடயங்கள் பேசப்பாடமலே இருக்க, எமது கைசேதம் இந்த மாதிரியான தலைப்பிலேயே வருடக்கணக்கில் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம். சமீப நாட்களாக பல நண்பர்களால் (சில உலமாக்கள் உட்பட) பூதகரமாக காட்டப்படும் ஒரு செயலாக - ‪#‎பிறந்த_நாள்_கொண்டாட்டம்‬ காணப்படுகிறது.
.
அல்லாஹ்வின் வேதத்தில் தடை செய்யப்பட்ட பல விடயங்களை எம்மவர்கள் சர்வசாதாரணமாக செய்துகொண்டிருக்கையில், பிறந்த நாள் கொண்டாடுவது பித்அத் - நபிவழிக்கு முரண் என பத்வாக்களை வாரி வழங்கிக் கொண்டுடிருக்கின்றனர்.
.
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் - அல்லாஹ்வின் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கமாக/நன்மை கருதி செய்வதே - பித்அத் ஆகும். அந்த அடிப்படையில் ‪#‎மீலாத்விழா‬ கொண்டாடுவது பித்அத் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், எவ்வித மார்க்க/நன்மை கருதிய எண்ணமும் இன்றி - சாதாரண மக்களால் சந்தோஷத்திற்காக கொண்டாடப்படும் பிறந்த நாளை பித்அத் எனக் கூறுவதை என்னால் ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது.
.
இன்னும் பிறந்தநாள் கொண்டாட்டம் மாற்றுமத கலாச்சாரம் இவற்றை நாம் பின்பற்றக் கூடாது எனும் ஓர் கருத்தும் முன்வைக்கப்படுகிறது அதற்கு சான்றாக பின்வரும் ஆதாரங்கள் காட்டப்படுகிறது.
.
4033 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ
حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِى مُنِيبٍ الْجُرَشِىِّ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -
صلى الله عليه وسلم- « مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ». - أبوداؤود
.
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள் நூல் : அபூதாவுத்
.
ஆனால் இவ்வதீஸ் ஆதாரபூர்வமானது கிடையாது - இவ்வதீஸ் அறிவிப்பாளர்களின் ஒருவரான - அப்துர்ரஹ்மான் பின் ஷாபித் பலவீனமாவராவர் இதே அறிவிப்பு - முஸ்னத் பஸ்ஸாரில் 2599 இல் இடம்பெறுகிறது அந்த ஹதீஸை பதிந்த இமாம் பஸ்ஸார் அவர்கள் - இவ்வறிப்பில் இடம் பெறும் அலிபின் குறாபை தவிர ஹிஷாமைத் தொட்டும் (மற்ற அனைவரும்) மவ்கூப்பாகவே அறிவிக்கின்றனர் எனக் கூறுகிறார்.
.
எனினும் புஹாரியில் 3456 இலக்க ஹதீஸ் - பின்வருமாறு இடம் பெறுகிறது, அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
.
உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின்
வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப்
பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்''
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையு­மா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?''
என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள். புஹாரி (3456).
.
இவற்றை நாம் எப்படி எடுத்துக் கொள்வது என்பதில் தான் இங்கு பெரும் சர்ச்சை காணப்படுகிறது. நீண்ட நாள் தேடிலின் பின்னர் எனக்கு கிடைக்கப்பெற்ற முடிவு:

இன்று நாம் பாவிக்கும் அதீநவீன கண்டுபிடிப்புக்கள் யாவும் நாம் அணியும் ஆடைவகைகள் உணவுப்பண்டங்கள் பெரும்பாலும் முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டவை கிடையாது.
.
உதாரணமாக எமது பள்ளிகளில் பிரசங்கத்தின் போது மைக் பாவிக்கப்படுகிறது இந்த மைக்கை கண்டுபிடித்தது முஸ்லிம் அல்ல மேலும் ஏனைய மதபிரச்சாரங்களின் போதும் மைக் பயன்படுத்தப்படும் எனவே அவர்களுடைய கலாச்சாரத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என நாம் ஒரு போதும் கூறுவதில்லை.
.
கணணி பாவிக்கின்றோம் அதனை கண்டுபிடித்ததும் முஸ்லிம் அல்ல என்றாலும் இது அந்நிய மத கலாச்சாரம் என்று நாம் கூறுவதில்லை அந்நிய மத பண்டிகைகளின் போதும் பலகாரம் செய்து வைப்பார்கள் நாமும் செய்கிறோம் பலகாரம் செய்வது அந்நிய கலாச்சாரம் என நாம் கூறுவதில்லை.
.
இந்த வகையில் எவையெல்லாம் - அந்நியர்களால் செய்யப்பட்டு அவர்களது வழிபாட்டுக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லையோ அவற்றை ஹராம் என்று கூறுவது சரியான கருத்தாக அமையாது.
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது ஒரு மதத்திற்கே உரிய கலாச்சாரம் கிடையாது ஆகவே பிறந்த நாள் கொண்டாடுவதையும் வாழ்த்து தெரிவிப்பதையும் எவ்வாறு ஹராம்/பித்அத் எனக் கூறுவது..?
.
என்றாலும் - வீண் செலவிருந்தால்அந்தவகையில் அது ஹராமாகும் என்பதில் மாற்றுகருத்து கிடையாது அது பிறந்த நாள் கொண்டாட்டம் மாத்திரமின்றி ஏனைய விருந்துகளுக்கும் பொருந்தும்.
.
எனினும் - அல்லாஹ்வால் சேதனைக்காக அனுப்பட்ட நாம் உலக வஸ்துக்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளாத பொறுப்பை ஏற்றுள்ள நாம் அல்லாஹ்வின் தீனை நிலைநாட்ட வேண்டிய நாம் எமது பொறுப்பை நிறைவேற்ற அல்லாஹ்வால் தரப்பட்ட காலத்தில் ஒரு வருடம் கழிந்துள்ளது என்று துக்கப்பட வேண்டுமே ஒளிய, பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடுவது எவ்விதத்திலும் பொருந்தமில்லை என்பது தான் எனது இறுதியான உறுதியான கருத்து.
.
பிறந்தநாள் வாழ்த்து சொல்வதே ஹராம்/பித்அத் என மிதமிஞ்சிய வாதங்களே இதனை எழுதத் துாண்டியது. தவறுகள் இருப்பின் அழகான முறையில் பின்னுாட்டலிடவும் சரியாக இருப்பின் மாற்றிக் கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். -அல்லாஹ்வே அறிந்தவன்-
.
- Ifham Mohamed

றமழான் தொடர்பான ஆதாரமற்ற ஹதீஸ்கள்:

சமூகத்தில் பரவியுள்ள றமழான் தொடர்பான
ஆதாரமற்ற ஹதீஸ்கள்:
---------------------------------------------------------------------------------------
1) றமழான் முதல் பத்து றஹ்மத், இரண்டாம் பத்து பாவ மன்னிப்பு, மூன்றாம் பத்து நரக விடுதலையாகும்.
---------------------------------------------------------------------------------------
- இது 'முன்கர்' தரத்திலான மிக பலவீனமான செய்தியாகும். பார்க்க:
.
1.கிதாபுழ் ழுஅபாஃ : இமாம் உகைலி (162/2).
2.இலலுல் ஹதீஸ் : இமாம் இப்னு அபீஹாதிம் (249/1).
3.அல் காமில் : இமாம் இப்னு அதீ (165/1).
4.ஸில்ஸிலதுல் அஹாதீஸ் : இமாம் அல்பானி (262/2).
---------------------------------------------------------------------------------------
2) நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் பெறுவீர்கள்.
---------------------------------------------------------------------------------------
- இது பலவீனமான செய்தியாகும். பார்க்க :
.
1.தஹ்ரீஜு இஹ்யா உலூமித்தீன் : ஹாபிழ் இராகி (75/3).
2.அல்காமில் : இமாம் இப்னு அதீ (357/2).
2.அல்பவாஇத் அல்மஜ்மூஆ : இமாம் ஷவ்கானி (259/1).
3.அல்மகாஸிதுல் ஹஸனா : ஹாபிழ் ஸஹாவீ (549/1).
---------------------------------------------------------------------------------------
3) தகுந்த காரணமோ, நோயோ இன்றி யார் ஒரு நோன்பை நோற்காமல் விடுகிறாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும் அதை கழா செய்தவராகமாட்டார்.
---------------------------------------------------------------------------------------
-பலவீனமான செய்தி. பார்க்க:
.
1.பத்ஹுல் பாரீ : ஹாபிழ் இப்னு ஹஜர் (161/4).
2.அல்இலல் : இமாம் தாரகுத்னீ
3.மிஷ்காதுல் மஸாபீஹ் (தஹ்கீக்): இமாம் அல்பானி (626/1).
---------------------------------------------------------------------------------------
4) ஒவ்வொரு நாளும் நோன்பு துறக்கும் போது அல்லாஹ் பலரை நரகிலிருந்து விடுதலை செய்கிறான்.
---------------------------------------------------------------------------------------
- இது பலவீனமான செய்தி. பார்க்க :
.
1.தன்ஸீஹுஷ் ஷரீஆ : இமாம் கினானி (155/2).
2.அல்பவாஇத் அல்மஜ்மூஆ : இமாம் ஷவ்கானி (257/1).
3.ஷுஃபுல் ஈமான் : இமாம் பைஹகி (304/3).
4.அல்காமில் : இமாம் இப்னு அதீ (455/2).
---------------------------------------------------------------------------------------
5) றமழானிலுள்ள நன்மைகளை அடியார்கள் அறிந்தால் வருடம் முழுதும் றமழானாக இருக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள்.
---------------------------------------------------------------------------------------
- பலவீனமான செய்தி. பார்க்க :
.
1.அல் மவ்ழூஆத் : இமாம் இப்னுல் ஜவ்ஸி (188/2).
2.மஜ்மஉஸ் ஸவாஇத் : இமாம் ஹைதமீ (141/3).
3.தன்ஸீஹுஷ் ஷரீஆ : இமாம் கினானி (153/2).
---------------------------------------------------------------------------------------
6) யாஅல்லாஹ் றஜபிலும் ஷஃபானிலும் எங்களுக்கு பறகத் செய்வாயாக. றமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக என்று நபியவர்கள் பிரார்த்திப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------
- பலவீனமான ஹதீஸ். பார்க்க :
.
1.அல்அத்கார் : இமாம் நவவி
2.மீஸானுல் இஃதிதால் : ஹாபிழ் தஹபி (96/3).
3.மஜ்மஉஸ் ஸவாஇத் : இமாம் ஹைதமி (165/2).
---------------------------------------------------------------------------------------
7) நபியவர்கள் நோன்பு துறக்கும் போது 'அல்லாஹும்ம லக ஸும்து வஅலா றிஸ்கிக அப்தர்து' என்ற துஆவை ஓதுவார்கள்.
---------------------------------------------------------------------------------------
- பலவீனமான ஹதீஸ். பார்க்க :
.
1.அல்பத்ருல் முனீர் : இமாம் இப்னுல் முலக்கின் (327/1).
2.தல்கீஸுல் ஹபீர் : ஹாபிழ் இப்னு ஹஜர் (202/2).
3.அல் அத்கார் : இமாம் நவவி (பக்:172).
4.மஜ்மஉஸ் ஸவாஇத் : இமாம் ஹைதமி (156/3).
.
ஆதாரமற்ற, பொய்யான, பலவீனமான ஹதீஸ்களை பேசுவதை, எழுதுவதை, பகிர்வதை முற்றாக தவிர்ப்போம்.
.
-Arm Rizwan
---------------------------------------------------------------------------------------
commets:
அட.. பார்க்கப்போனால் ரமழான்ல அப்பிடியொண்ணும் பெரிய ஸ்பெஷல் இல்ல போல இருக்கே brother. இவங்கதான் சும்மா பில்டப் பண்றாங்களா? நோன்பு பிடிக்கணும் அப்பிடின்றதுக்காக கூட ஏதும் பலவீனமில்லாத ஹதீஸ் இருக்கா brother?
.
-Mohamed Hasan Basree
.

எதிரிகளை போர்க்களத்தில் சந்திக்கும் போது ஓதும் துஆ

யா அல்லாஹ் நீயே எனக்கு பக்கபலம்.
நீயே எனக்கு உதவி செய்பவன்.
உனது உதவி கொண்டே நான் சுற்றிச் சுழல்கிறேன்.
மேலும் உன் உதவி கொண்டே தாக்குதல் தொடுக்கிறேன்.
உனது உதவி கொண்டே (எதிரிகளுடன்) போரிடுகிறேன்.

நூல்:
அபூதாவூத் பாகம் 2 பக்கம் 42
திர்மிதி பாகம் 5 பக்கம் 572.
ஸஹீஹுத் திர்மிதி பாகம் 3 பக்கம் 183

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் கொண்டாடலாமா?
++++++++++++++++++++++++++
எமக்கு மத்தியில் பேசப்படக்கூடிய நிறைய விடயங்கள் பேசப்பாடமலே இருக்க, எமது கைசேதம் இந்த மாதிரியான தலைப்பிலேயே வருடக்கணக்கில் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம். சமீப நாட்களாக பல நண்பர்களால் (சில உலமாக்கள் உட்பட) பூதகரமாக காட்டப்படும் ஒரு செயலாக - ‪#‎பிறந்த_நாள்_கொண்டாட்டம்‬ காணப்படுகிறது.
.
அல்லாஹ்வின் வேதத்தில் தடை செய்யப்பட்ட பல விடயங்களை எம்மவர்கள் சர்வசாதாரணமாக செய்துகொண்டிருக்கையில், பிறந்த நாள் கொண்டாடுவது பித்அத் - நபிவழிக்கு முரண் என பத்வாக்களை வாரி வழங்கிக் கொண்டுடிருக்கின்றனர்.
.
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் - அல்லாஹ்வின் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கமாக/நன்மை கருதி செய்வதே - பித்அத் ஆகும். அந்த அடிப்படையில் ‪#‎மீலாத்விழா‬ கொண்டாடுவது பித்அத் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், எவ்வித மார்க்க/நன்மை கருதிய எண்ணமும் இன்றி - சாதாரண மக்களால் சந்தோஷத்திற்காக கொண்டாடப்படும் பிறந்த நாளை பித்அத் எனக் கூறுவதை என்னால் ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது.
.
இன்னும் பிறந்தநாள் கொண்டாட்டம் மாற்றுமத கலாச்சாரம் இவற்றை நாம் பின்பற்றக் கூடாது எனும் ஓர் கருத்தும் முன்வைக்கப்படுகிறது அதற்கு சான்றாக பின்வரும் ஆதாரங்கள் காட்டப்படுகிறது.
.
4033 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ
حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِى مُنِيبٍ الْجُرَشِىِّ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -
صلى الله عليه وسلم- « مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ». - أبوداؤود
.
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள் நூல் : அபூதாவுத்
.
ஆனால் இவ்வதீஸ் ஆதாரபூர்வமானது கிடையாது - இவ்வதீஸ் அறிவிப்பாளர்களின் ஒருவரான - அப்துர்ரஹ்மான் பின் ஷாபித் பலவீனமாவராவர் இதே அறிவிப்பு - முஸ்னத் பஸ்ஸாரில் 2599 இல் இடம்பெறுகிறது அந்த ஹதீஸை பதிந்த இமாம் பஸ்ஸார் அவர்கள் - இவ்வறிப்பில் இடம் பெறும் அலிபின் குறாபை தவிர ஹிஷாமைத் தொட்டும் (மற்ற அனைவரும்) மவ்கூப்பாகவே அறிவிக்கின்றனர் எனக் கூறுகிறார்.
.
எனினும் புஹாரியில் 3456 இலக்க ஹதீஸ் - பின்வருமாறு இடம் பெறுகிறது, அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
.
உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின்
வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப்
பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்''
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையு­மா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?''
என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள். புஹாரி (3456).
.
இவற்றை நாம் எப்படி எடுத்துக் கொள்வது என்பதில் தான் இங்கு பெரும் சர்ச்சை காணப்படுகிறது. நீண்ட நாள் தேடிலின் பின்னர் எனக்கு கிடைக்கப்பெற்ற முடிவு:

இன்று நாம் பாவிக்கும் அதீநவீன கண்டுபிடிப்புக்கள் யாவும் நாம் அணியும் ஆடைவகைகள் உணவுப்பண்டங்கள் பெரும்பாலும் முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டவை கிடையாது.
.
உதாரணமாக எமது பள்ளிகளில் பிரசங்கத்தின் போது மைக் பாவிக்கப்படுகிறது இந்த மைக்கை கண்டுபிடித்தது முஸ்லிம் அல்ல மேலும் ஏனைய மதபிரச்சாரங்களின் போதும் மைக் பயன்படுத்தப்படும் எனவே அவர்களுடைய கலாச்சாரத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என நாம் ஒரு போதும் கூறுவதில்லை.
.
கணணி பாவிக்கின்றோம் அதனை கண்டுபிடித்ததும் முஸ்லிம் அல்ல என்றாலும் இது அந்நிய மத கலாச்சாரம் என்று நாம் கூறுவதில்லை அந்நிய மத பண்டிகைகளின் போதும் பலகாரம் செய்து வைப்பார்கள் நாமும் செய்கிறோம் பலகாரம் செய்வது அந்நிய கலாச்சாரம் என நாம் கூறுவதில்லை.
.
இந்த வகையில் எவையெல்லாம் - அந்நியர்களால் செய்யப்பட்டு அவர்களது வழிபாட்டுக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லையோ அவற்றை ஹராம் என்று கூறுவது சரியான கருத்தாக அமையாது.
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது ஒரு மதத்திற்கே உரிய கலாச்சாரம் கிடையாது ஆகவே பிறந்த நாள் கொண்டாடுவதையும் வாழ்த்து தெரிவிப்பதையும் எவ்வாறு ஹராம்/பித்அத் எனக் கூறுவது..?
.
என்றாலும் - வீண் செலவிருந்தால்அந்தவகையில் அது ஹராமாகும் என்பதில் மாற்றுகருத்து கிடையாது அது பிறந்த நாள் கொண்டாட்டம் மாத்திரமின்றி ஏனைய விருந்துகளுக்கும் பொருந்தும்.
.
எனினும் - அல்லாஹ்வால் சேதனைக்காக அனுப்பட்ட நாம் உலக வஸ்துக்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளாத பொறுப்பை ஏற்றுள்ள நாம் அல்லாஹ்வின் தீனை நிலைநாட்ட வேண்டிய நாம் எமது பொறுப்பை நிறைவேற்ற அல்லாஹ்வால் தரப்பட்ட காலத்தில் ஒரு வருடம் கழிந்துள்ளது என்று துக்கப்பட வேண்டுமே ஒளிய, பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடுவது எவ்விதத்திலும் பொருந்தமில்லை என்பது தான் எனது இறுதியான உறுதியான கருத்து.
.
பிறந்தநாள் வாழ்த்து சொல்வதே ஹராம்/பித்அத் என மிதமிஞ்சிய வாதங்களே இதனை எழுதத் துாண்டியது. தவறுகள் இருப்பின் அழகான முறையில் பின்னுாட்டலிடவும் சரியாக இருப்பின் மாற்றிக் கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். -அல்லாஹ்வே அறிந்தவன்-
.
- Ifham Mohamed

மதுபானத்துடன் தொடர்புள்ள 10 பேர்:

மதுபானத்துடன் தொடர்புள்ள 10 பேர்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதுபானத்துடன் தொடர்புள்ள பத்துப் பேரை சபித்தார்கள்.

1. மதுவைத் தயாரித்தவர்.
2. அதைத் தயாரிக்கச் சொன்னவர்.
3. அதை அருந்தியவர்
4. அதைச் சுமந்து எடுத்துவந்தவர்.
5. அதைச் சுமந்து வரச் சொன்னவர்.
6. அதைப் பரிமாறியவர்.
7. அதை விற்றவர்.
8. அதில் கிடைக்கும் வருமானத்தை உண்டவர்.
9. அதை விலைகொடுத்து வாங்கியவர்.
10. அது யாருக்காக வாங்கப்பட்டதோ அவர்.

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி).
நூல்: ஜாமிஉத் திர்மிதீ, பாகம்:2 ஹதீஸ் எண்: 1216.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகையில் கேட்ட துஆ

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகையில் கேட்ட துஆ...

நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும்

இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்.

வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே!
உனக்கே புகழ் அனைத்தும்.

வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது.
உனக்கே புகழ் அனைத்தும்.

வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே!
உனக்கே புகழ் அனைத்தும்.

வானங்கள் பூமிக்கு அரசன் நீயே!
உனக்கே புகழ் அனைத்தும்.

நீ உண்மையாளன்.
உன் வாக்குறுதி உண்மை.
உன்னுடைய சந்திப்பு உண்மை.
உன்னுடைய கூற்று உண்மை.
சொர்க்கம் உண்மை.
நரகம் உண்மை.
நபிமார்கள் உண்மையாளர்கள்.
முஹம்மது உண்மையாளர்.
மறுமை நாள் உண்மை.

இறைவா!
உனக்கே கட்டுப்பட்டேன்.
உன்னையே நம்பினேன்.
உன்மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன்.
உன்னிடமே திரும்புகிறேன்.
உன்னிடமே நீதி கேட்பேன்.

எனவே
நான் முந்திச் செய்த,
பிந்திச் செய்கின்ற,
இரகசியமாகச் செய்த,
பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு.

நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன்.

உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை.

உன்னுடைய உதவியின்றி
நன்மை செய்யும் ஆற்றலோ
தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை

என்று கூறிவார்கள்.

(புகாரி:1120. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்)