Thursday, May 31, 2018

அல்லாஹ் யாரை நேசிக்கிறான், அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை

ஒவ்வொரு முஸ்லிமின் இறுதி ஆசை தன்னை அல்லாஹ் நேசிக்கவேண்டும், அவனின் உவப்பிற்குறியவானான தான் மாற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும், இருக்கவேண்டும்.

குர்ஆனின் அற்புதத்தைப் பாருங்கள் அல்லாஹ் யாரை #நேசிக்கிறான் என்பதை #பதினாறு16 இடங்களிலும், அல்லாஹ் யாரை #நேசிப்பதில்லை என்பதை #பதினாறு16இடங்களிலும் ஒரே அளவில் சுட்டிக்காட்டுகிறது.

குர்ஆனை ஓதுகிற பொழுது அந்த இடங்களில் சற்று நிதானித்து யாரை அல்லாஹ் நேசிக்கிறான்,யாரை வெறுக்கிறான் என்பதை மனதில் உள் வாங்கி நாம் செயல்பட ஆரம்பித்தால் நிச்சயமாக நாம் அல்லாஹ் வின் நெருக்கமான அடியானாக மாறிவிடலாம்.

#அல்லாஹ்வால்_நேசிக்கப்படுபவர்கள்

1- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்
[البقرة: 195].
2- (إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ)
பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.
[البقرة: 222].
3- (فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ)
நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்
[آل عمران: 76].
4- (وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ)
நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
[آل عمران: 134].
5- (وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ)
அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்
[آل عمران: 146].
6- (وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ)
அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.
[آل عمران: 148].
7- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ)
நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்
[آل عمران: 159].
8- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ)
மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்
[المائدة: 13].
9- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ)
நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
[المائدة: 42].
10- (وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ)
நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
[المائدة: 93].
11- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ)
நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
[التوبة: 4].
12- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ)
நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்
[التوبة: 7].
13- (وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ)
அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்
[التوبة: 108].
14- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ)
நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
[الحجرات: 9].
15- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ)
நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்
[الممتحنة: 8].
16- (إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُمْ بُنْيَانٌ مَرْصُوصٌ)
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான் ( 4:الصف )

#அல்லாஹ்வால்_நேசிக்கப்படாதவர்கள்

✔ ثانياً: ( مالا يحبه الله ) :

1- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ)
நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
[البقرة: 190].
2- (وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ)
கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
[البقرة: 205].
3- (وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ)
(தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
[البقرة: 276].
4- (فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ)
நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
[آل عمران: 32].
5- (وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ)
அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
[آل عمران: 57].
6- (وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ)
அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை
[آل عمران: 140].
7- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا)
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
[النساء: 36].
8- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمًا)
கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
[النساء: 107].
9- (وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ)
அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
[المائدة: 64].
10- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ)
நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை
[المائدة: 87].
11- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ)
நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
[الأنفال: 58].

12- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ)
நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
[الحج: 38].
13- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ)
அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்
[القصص: 76].
14- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ)
நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை
[القصص: 77].
15- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ)
அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
[لقمان: 18].
16- (وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ)
கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
[الحديد: 23].

நம் அனைவரும் அல்லாஹ் தன்னுடைய நேசத்திற்குறியவர்களில் பட்டியலில் இணைப்பானாக! ஆமீன்.

Saturday, May 19, 2018

நபிமார்கள் கேட்ட (40) துஆக்கள்

நபிமார்கள் கேட்ட (40) துஆக்கள்
-----------------------

  01. துஆக்கள் ஏற்கப்பட 

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ )

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்". எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 2: 127௧28)

  -----------------------

  02. ஈருலக நன்மை பெற 

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ )

"ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!"

(அல்குர்ஆன் 2: 201)

-----------------------

  03. கல்வி ஞானம் பெற 

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ

( أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِي )

"அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." (அல்குர்ஆன் 2:67)

தொடர்ச்சிக்கு...

http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3845