Monday, October 11, 2010

Dead body of FIRON

குர்ஆன் குறிப்பிடும் பாதுகாக்கப்பட்ட சடலம்
The truth has certainly come..... Dead body of FIRON. 


நபி நூஹ் (அலை) அவர்களின் வரலாற்றைப் போன்றே சுமார் மூவாயிரம் ஆணடுகளுக்கு முந்திய நபி மூஸா ( அலை ) அவர்களின் வரலாறும் விந்தைக்குரிய வேதமாம குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டை ஆட்சிபுரிந்து வந்தான் கிப்தி இனத்தைச்சேர்ந்த ஃபிர்அவ்ன் என்ற மன்னன். தன் நாட்ட வரில் பெரும்பான்மையினரான பனீ இஸ்ராயீல் (இஸ்ரவேலரின் சந்ததியினரின்)இனத்தவரை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்டு, கொடுங்கோலாட்சி புரிந்து வந்த ஃபிர்அவ்ன் தானே இறைவன் என்றும் தன்னையே மக்கள் வணங்க வேண்டுமென்றும் மமதையோடு கொக்கரித்தான். அவனது அகம்பாவ ஆட்சியின் கொடுமைகள் அத்து மீறித் தாண்டவமாடியதால், இறைவன் தனது தூதராக நபி மூஸா ( அலை ) அவர்களை அனுப்பினான்.





"ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும் அவர்களை வேதனை படுத்தாதே, திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்" (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). (Taa - Haa.20:47)

நாம் நம்முடைய அத்தாட்சிகளையெல்லாம் ஃபிர்அவ்னுக்குக் காண்பித்தோம்; ஆனால் அவன் (அவற்றையெல்லாம்) பொய்யெனக் கூறி, நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டான்; (Taa - Haa.20:56)

فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ

عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ
we shall preserve your body today that you may be a lesson for those who come after you! as many, a man is heedless of our signs! (YUNUS.10:92)

உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காக உன்னுடைய உடலை (அழியாமல்) நாம் இன்றைய நாளில் பாதுகாத்துக் கொள்வோம். ஏனினும் நிச்சயமாக மனிதர்களில் அனேகர் நம்முடைய சான்றுகளைப்பற்றிப் பாராமுகமாக இருக்கின்றனர். அல்குர்ஆன்:(YUNUS.10:92)

ஆண்டான் அடிமையென்ற ஏகபோக எதேச்சதிகார ஏகாதிhத்தியத்தால் எக்காளமிட்ட ஆணவத்தை அழித்து , விடுதலை வேட்கையின் எழுச்சிமிகு வெற்றிச் சங்கு ஊதும் இந்த சுவையான வரலாற்றை உலகோருக்கோர் பாடமாக இந்த நிகழ்ச்சியை கூறிமுடிக்கிறது சத்தியத்திருமறை!

No comments:

Post a Comment