Tuesday, June 16, 2015

மாதவிடாய் உனது கையிலில்லை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருக்கும் போது (தம் துணைவியாரிடம்),

"ஆயிஷா! அந்தத் துணியை எடுத்து என்னிடம் தா!'' என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மாதவிடாய் உனது கையிலில்லை'' என்று சொன்னார்கள்.
அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.

நூல் : முஸ்லிம் (504)

‎அல்லாஹ்‬ நன்மைகளையும் தீமைகளையும் விவரித்தான்

நபி (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பற்றி அறிவிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்.

‎அல்லாஹ்‬ நன்மைகளையும் தீமைகளையும் எழுதி விட்டான். பிறகு அவன் அதனை விவரித்தான்.

அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என்று (மனதில்) எண்ணி விட்டாலே - அவர் அதைச் செய்யாவிட்டாலும் - அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாகப் பதிவு செய்கின்றான்.

அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால் அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக பதிவு செய்கின்றான்.

ஆனால் ஒருவர் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகின்றான்.

எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகின்றான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 6491

Monday, June 15, 2015

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஹராம் என்பவர்கள்,
அதனை எந்த வகையான மதிப்பீட்டின் அடிப்படையில் சொல்கின்றார்கள்?
.
1) புதிதாக உருவக்கப்பட்ட நூதனம்-பித்-ஆ என்றா
2) அல்லது இஸ்லாத்தின் ஏதேனும் அடிப்படைகளுடன்
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முரண்படுகின்றது என்கிறார்களா
3) அல்லது இது அந்நிய கலாச்சாரம் என்ற வகையில் தடை செய்யப்பட்டது என்று கூற வருகின்றார்களா?
.
இதனை பித்-ஆ என்று வரையறுக்க முனைந்தால்,
வணக்க வழிபாடுகளில் மட்டுமே நூதனங்கள் உருவாக முடியும்.
மாறாக சமூக வாழ்கையில் பித்-ஆக்கள் உருவாகாது என்பதே எமது புரிதலாகும்.
.
அந்நிய கலாச்சாரத்தை நாம் பின்பற்றுவது ஹராம்
என்று பொத்தாம் பொதுவாக எல்லாவற்றையும் சாராம்சமாக
ஒரு சட்டகத்தினுள் அடைத்துவிட முடியாது.
.
மதம் சார்ந்த கலாச்சாரத்துக்கும்,
மதம் சாராத தேசிய காலாச்சாரங்களுக்கும்
இடையிலான வித்தியாசங்களை நாம்
பகுத்துணர்ந்து கொள்ள வேண்டும்.
.
இதுவல்லாமல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
இஸ்லாத்தின் எந்த ஷரிஆ விதிமுறையுடன் மோதுகின்றது
என்பதை தெளிவாக முன்வைத்தல் நாம் இதுபற்றி சிந்திக்கலாம்.
.
----------------------------------------------------------------------------------------------------------------------
பிறந்தநாள் கொண்டாடலாமா?
----------------------------------------------------------------------------------------------------------------------
.
எமக்கு மத்தியில் பேசப்படக்கூடிய நிறைய விடயங்கள் பேசப்பாடமலே இருக்க, எமது கைசேதம் இந்த மாதிரியான தலைப்பிலேயே வருடக்கணக்கில் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம். சமீப நாட்களாக பல நண்பர்களால் (சில உலமாக்கள் உட்பட) பூதகரமாக காட்டப்படும் ஒரு செயலாக - ‪#‎பிறந்த_நாள்_கொண்டாட்டம்‬ காணப்படுகிறது.
.
அல்லாஹ்வின் வேதத்தில் தடை செய்யப்பட்ட பல விடயங்களை எம்மவர்கள் சர்வசாதாரணமாக செய்துகொண்டிருக்கையில், பிறந்த நாள் கொண்டாடுவது பித்அத் - நபிவழிக்கு முரண் என பத்வாக்களை வாரி வழங்கிக் கொண்டுடிருக்கின்றனர்.
.
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் - அல்லாஹ்வின் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கமாக/நன்மை கருதி செய்வதே - பித்அத் ஆகும். அந்த அடிப்படையில் ‪#‎மீலாத்விழா‬ கொண்டாடுவது பித்அத் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், எவ்வித மார்க்க/நன்மை கருதிய எண்ணமும் இன்றி - சாதாரண மக்களால் சந்தோஷத்திற்காக கொண்டாடப்படும் பிறந்த நாளை பித்அத் எனக் கூறுவதை என்னால் ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது.
.
இன்னும் பிறந்தநாள் கொண்டாட்டம் மாற்றுமத கலாச்சாரம் இவற்றை நாம் பின்பற்றக் கூடாது எனும் ஓர் கருத்தும் முன்வைக்கப்படுகிறது அதற்கு சான்றாக பின்வரும் ஆதாரங்கள் காட்டப்படுகிறது.
.
4033 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ
حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِى مُنِيبٍ الْجُرَشِىِّ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -
صلى الله عليه وسلم- « مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ». - أبوداؤود
.
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள் நூல் : அபூதாவுத்
.
ஆனால் இவ்வதீஸ் ஆதாரபூர்வமானது கிடையாது - இவ்வதீஸ் அறிவிப்பாளர்களின் ஒருவரான - அப்துர்ரஹ்மான் பின் ஷாபித் பலவீனமாவராவர் இதே அறிவிப்பு - முஸ்னத் பஸ்ஸாரில் 2599 இல் இடம்பெறுகிறது அந்த ஹதீஸை பதிந்த இமாம் பஸ்ஸார் அவர்கள் - இவ்வறிப்பில் இடம் பெறும் அலிபின் குறாபை தவிர ஹிஷாமைத் தொட்டும் (மற்ற அனைவரும்) மவ்கூப்பாகவே அறிவிக்கின்றனர் எனக் கூறுகிறார்.
.
எனினும் புஹாரியில் 3456 இலக்க ஹதீஸ் - பின்வருமாறு இடம் பெறுகிறது, அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
.
உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின்
வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப்
பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்''
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையு­மா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?''
என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள். புஹாரி (3456).
.
இவற்றை நாம் எப்படி எடுத்துக் கொள்வது என்பதில் தான் இங்கு பெரும் சர்ச்சை காணப்படுகிறது. நீண்ட நாள் தேடிலின் பின்னர் எனக்கு கிடைக்கப்பெற்ற முடிவு:

இன்று நாம் பாவிக்கும் அதீநவீன கண்டுபிடிப்புக்கள் யாவும் நாம் அணியும் ஆடைவகைகள் உணவுப்பண்டங்கள் பெரும்பாலும் முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டவை கிடையாது.
.
உதாரணமாக எமது பள்ளிகளில் பிரசங்கத்தின் போது மைக் பாவிக்கப்படுகிறது இந்த மைக்கை கண்டுபிடித்தது முஸ்லிம் அல்ல மேலும் ஏனைய மதபிரச்சாரங்களின் போதும் மைக் பயன்படுத்தப்படும் எனவே அவர்களுடைய கலாச்சாரத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என நாம் ஒரு போதும் கூறுவதில்லை.
.
கணணி பாவிக்கின்றோம் அதனை கண்டுபிடித்ததும் முஸ்லிம் அல்ல என்றாலும் இது அந்நிய மத கலாச்சாரம் என்று நாம் கூறுவதில்லை அந்நிய மத பண்டிகைகளின் போதும் பலகாரம் செய்து வைப்பார்கள் நாமும் செய்கிறோம் பலகாரம் செய்வது அந்நிய கலாச்சாரம் என நாம் கூறுவதில்லை.
.
இந்த வகையில் எவையெல்லாம் - அந்நியர்களால் செய்யப்பட்டு அவர்களது வழிபாட்டுக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லையோ அவற்றை ஹராம் என்று கூறுவது சரியான கருத்தாக அமையாது.
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது ஒரு மதத்திற்கே உரிய கலாச்சாரம் கிடையாது ஆகவே பிறந்த நாள் கொண்டாடுவதையும் வாழ்த்து தெரிவிப்பதையும் எவ்வாறு ஹராம்/பித்அத் எனக் கூறுவது..?
.
என்றாலும் - வீண் செலவிருந்தால்அந்தவகையில் அது ஹராமாகும் என்பதில் மாற்றுகருத்து கிடையாது அது பிறந்த நாள் கொண்டாட்டம் மாத்திரமின்றி ஏனைய விருந்துகளுக்கும் பொருந்தும்.
.
எனினும் - அல்லாஹ்வால் சேதனைக்காக அனுப்பட்ட நாம் உலக வஸ்துக்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளாத பொறுப்பை ஏற்றுள்ள நாம் அல்லாஹ்வின் தீனை நிலைநாட்ட வேண்டிய நாம் எமது பொறுப்பை நிறைவேற்ற அல்லாஹ்வால் தரப்பட்ட காலத்தில் ஒரு வருடம் கழிந்துள்ளது என்று துக்கப்பட வேண்டுமே ஒளிய, பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடுவது எவ்விதத்திலும் பொருந்தமில்லை என்பது தான் எனது இறுதியான உறுதியான கருத்து.
.
பிறந்தநாள் வாழ்த்து சொல்வதே ஹராம்/பித்அத் என மிதமிஞ்சிய வாதங்களே இதனை எழுதத் துாண்டியது. தவறுகள் இருப்பின் அழகான முறையில் பின்னுாட்டலிடவும் சரியாக இருப்பின் மாற்றிக் கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். -அல்லாஹ்வே அறிந்தவன்-
.
- Ifham Mohamed

Thursday, February 26, 2015

அவுரங்கஸீப்

தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்ட மாமனிதர் - அவுரங்கஸீப்
.
அவுரங்கஸீப் அவர்கள் இந்து, சீக்கி மக்களுக்கு வரலாற்றில் ஒரு கொடூரமான ஆட்சியாளராகக் காட்டப்பட்டுள்ளார். அவுரங்கஸீப் 1618ம் ஆண்டில் பிறந்தார்கள். ஆக்ராவை ஆண்ட மன்னர் ஷா-ஜஹானுக்கு மகனாகப் பிறந்த அவுரங்கஸீப் அவர்கள் தந்தையின் குணங்களில் இருந்தும் வித்தியாசமானவராக இருந்தார். சிறு வயதில் அல்-குர்ஆன்,ஹதீஸ் ஆகிய துறைகளை ஆழமாகக் கற்றார். 
.
அரபு,பாரசீகம்,சகாதாய்,துருக்கி ஆகிய மொழிகளில் அவருக்கு நிபுணத்துவம் இருந்தது. முகலாயப் பேரரசில் இஸ்லலாமிய ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற இலக்கு அவுரங்கஸீபின் மனதில் பதிந்திருந்தது. சட்டத்தின் ஆட்சி இஸ்லாமிய அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
.
அவுரங்கஸீப் ஆட்சி பீடம் ஏற முன்னரும் அவரது தந்தையின் பல நடவடிக்கைகளோடு அவருக்கு இணக்கப்பாடு இருக்கவில்லை. தாஜ்மஹால் கட்டப்பட்டதை தன்னால் ஏற்றுக்கொள் முடியாது என்று அவர் பகிரங்கமாக கூறினார். 
.
அவுரங்கசீப் முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களின் ஐந்தாவது பிள்ளையாவர்.. இவர் ஆலம்கீர் என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய மட்டுமே 49 ஆண்டுகள் வரை நாட்டை ஆண்டார்கள்.
.
பேரரசர் அவ்ரங்கஸீப் அவாகள் இஸ்லாமிய சட்டத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் மகத்தானவை. இது பற்றி சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முஹம்மத் அல் ஷரீப் அவர்கள் கூறுகையில், இஸ்லாமிய சட்டத்துறை நிபுணர்களை ஒன்றிணைத்து “பத்வா-ஏ-ஆலம்கீரி”என்று நூலை வெளியிட்டாராகள். இது الفتاوى الهندية (பத்வா -ஏ- ஹிந்திய்யா) என்றும் அழைக்கப்படுகிறது. பத்வா - ஏ- ஹிந்திய்யா “அல்லது பத்வா-ஏ-ஆலம்கீரி” ஹனபி சட்டத்தை மத்ஹபின் சட்டத்தை அடிப்படையாக கொண்டதாகும். முகலாய சம்ராஜ்யம் விரிந்திருந்த சகல பிரதேசங்களுக்கும் இந்த நூல் அனுப்பப்பட்டது. இந்தியா, மக்கா-மதீனா, ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 300 சட்டதுறை அறிஞர்களின் பங்கேற்புடன் பத்வா ஆலம்கீரி எழுதப்பட்டது. 
.
இந்தியத் துணைக் கண்டத்தின் முஜத்தித் என்று வர்ணிக்கப்படும் ஷா வலியுல்லாஹ் அவர்களின் தந்தை ஷா அப்துல் ரஹீம் அவர்கள் இதனைத் தொகுத்தார்கள். இமாம் அபூஹனீபா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் மாணவர்களான இமாம் முஹம்மத் ஷைபானி, இமாம் அபு யூசுப் ஆகியோர் வகுத்த ஹனபி சட்டத்தின் அடிப்படையில் மன்னர் ஸாஜஹானின் காலம் வரை குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் இந்த உசத்துணைகள் காணாமல் போனதை தொடர்ந்து அந்த குறைப்பாட்டை தீர்க்கும் வகையில் இந்த பத்வா ஏ ஆலம்கீர் என்ற நூல் எழுதப்பட்டது.
.
இந்துக்களுக்குச் சொந்தமான கோயில்களை இடிக்கப்பட்டாதாக முன் வைக்கப்படும் குற்றாச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன. அவுரங்கஸீப் தான் ஒரு முஸ்லிமாக கூட தனது ஆட்சியில் இந்துக்களுக்கோ சீக்கியர்களுக்கோ எதுவித மாறுபாடும் காட்டவில்லை என்று அமெரிக்காவின் அரசிசோனா பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பேராசிரியர் ரிச்சட் ஈர்ட்டன் அவர்கள் கூறுகிறார். அவரது நிர்வாகப் பணிகளிலும், நீதிமன்றத்திலும் பிரதான பதவிகளை வகித்தவர்கள் இந்துக்கள் ஆவர். The Rise of Islam and the Bengal Frontier, Essays on Islam and Indian History, India's Islamic Traditions, 711-1750 போன்ற நூல்கள் இவற்றை தெளிவாக விளக்குகின்றன. முஹம்மது பின் காஸிமின் படை கி.பி 711ம் ஆண்டில் இந்தியாவை தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்தது.
ஹிந்து, சீக்கிய வழிபாட்டுத்தலங்கள் உடைக்கப்படடமைக்காக காரணம் "சில தலங்கள் வழிபாட்டுத்தலங்கலாக மாத்திரம் இருக்கவில்லை. 
.
ஹிந்து சீக்கிய மதத்தலங்கள் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகவும் காணப்பட்டன, கோயில்களில் பணிபுரிந்த ஐயர்களுக்கு கட்டுப்பட்டே பெரும்பாலான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொண்டார்கள். இதனால் நிர்வாகப் பணிகளை முன்னெடுப்பதில் அவுரங்கஸீப் அவர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்தார். அரசாங்க நிர்வாகத்தை மீறி செயற்படும் கோயில்கள மாத்திரமே இடிக்கப்பட்டதாக Temple Desecration and Indo-Muslim States என்ற ஆய்வுகட்டுரையில் பேராசிரியர் Richard Eaton, அவர்கள் வலியுறுத்துகிறார். பெரும்பாலான அரச நிர்வாகங்களில் தாக்கம் செலுத்தாத சகல கோயில்களும் பாதுகாக்கப்பட்டன .
.
ஆறுக்கும், அதிகமான நாடுகளின் ஆட்சி மன்னர் அவுரங்கஸீபிடம் இருந்தது. அவரது வாழ்கை முறை வரலாற்று ஆய்வாளர்களையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஒரு கோடிக்குக்கும் அதிகமான மக்களுக்கு அவர் மன்னராக இருந்தார்.
.
முஹலாய பேரரசர்களுள் மிகுந்த செல்வம் ஈட்டியவர் அவுரங்கசீப் மன்னர் ஆவர். .அன்றைய காலகட்டத்தில் உலகின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது .இருந்தும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளார் .இதை விடவும் ஆச்சர்யம்,இன்று உள்நாட்டு உற்பத்தி கணக்கிடும் GDP எனப்படும் மொத்த தேசிய உற்பத்தி 30%ஆக இருந்துள்ளது. இன்று வரை உலகின் எந்த நாடும் இந்த சாதனையை முறியடிக்க இயலவில்லை. 
.
ஆனால் அவுரங்கிஸிப் ஒரு நாளில் மூன்று மணித்தியாலங்கள் மாத்திரமே தூங்கினார். நாளாந்தம் ஒரு தடவை மாத்திரமே சாப்பிட்டார். அதிகமான நாட்கள் நோன்பு நோற்றார்கள். அவுரங்கசீபின் தலைப்பாகையில் ஒரே ஒரு கல் மட்டும் பதிக்கப்பட்டிருந்தது. அதிக அலங்காரங்கள் இருக்கவில்லை. பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளையே அணிந்தார். மன்னர் அவுரங்கஸீபின் உடையின் பெறுமதி வெறும் பத்து ரூபாவாகவே இருந்தது.. ஆலம்கீரின் சொந்த வாழ்க்கை மிக எளிமையானதாகும். தன்னை எப்பொழுதுமே இறைவனின் அடிமையாக பாவித்துக்கொண்டார்.
.
அரசாங்கத்தின் பணத்தில் இருந்து ஒரு சதத்தையேனும் அவர் சொந்த செலவிற்கு பயன்படுத்தவில்லை. தனக்காக ஆடம்பர செலவில் மாளிகைகளை அமைக்கவும் இல்லை.
.
ஆட்சிக்காலத்தில் கட்டிலை அவர் பயன்படுத்தவில்லை அவுரங்கஸீப் தனது மரணம் வரை தரையிலேயே தூங்கினார் என்று மௌலானா செய்யித் அபுல் ஹசன் அலி நத்வி அவர்கள் தனது Saviours of Islamic Spirit என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
.
அவுரங்கஸீப் அவர்களின் கடைசி நேரம் பற்றி இத்தாலிய எழுத்தாளரும், வரலாற்று ஆசிரியருமான niccolao manucci ஆக்கங்களை மேற்கோள் காட்டி செய்யித் அபுல் ஹசன் அலி நத்வி அவர்கள் விவரிக்கிறார்கள். மன்னர் அவுரங்கஸீப் நான்கு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் இரண்டு பணப்பைகள் காணப்பட்டன ஒரு பையில் 4 ரூபா ஐம்பது சதம் இருந்ததது. இந்த பணம் தொப்பி தைத்து மன்னர் சாம்பாதித்த காசாகும். மற்றுமொரு பையில் தான் அல்குர்ஆனை எழுதி சம்பாதித்த 805 ரூபா இருந்தது. அதை எழைகளுக்கு வழங்குமாறு தனது உறவினர்களிடம் கூறிவிட்டு 1707ம் ஆண்ட மார்ச் மாதம் வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் மன்னர் அவுரங்கசீப் தனது கண்களை மூடிக்கொண்டார் அன்று அவருக்கு 88 வயதாகும்.
.
அல்லாஹ் இவர்களை பொருந்திகொள்வானாக.