Saturday, March 10, 2018

திராவிடர் கழகம்’ என்று பெயர் வைத்தது ஏன்?

தங்களது இயக்கத்திற்கு ’திராவிடர் கழகம்’ என்று பெயர் வைத்தது ஏன்? ‘தமிழர் கழகம்’ என்று வைக்கக் கூடாதா?

”திராவிடர் என்பதற்குப் பதிலாக ’தமிழர்கள்’ என்று ஏன் வழங்கக் கூடாது என்று சிலர் கேட்கிறார்கள்.

தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள் தாங்களும் தமிழர்கள்தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள்.

‘நாங்களும் தமிழ் நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்;
தமிழே பேசுகிறோம்; தமிழ்நாட்டிலேயே இருக்கிறோம்.
அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?’ என்று கேட்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழர் என்பது தமிழ் (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும் - இன்று அது மொழிப் பெயராக மாறி விட்டிருப்பதால்,

அம்மொழி பேசும் ‘ஆரியப் பண்பு உடைய’ மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்று உரிமை பாராட்ட முன் வந்து விடுகிறார்கள்.

அதோடு ஆரியப் பண்பை நம் மீது சுமத்த அந்தச் சேர்க்கையை பயன்படுத்தி விடுகிறார்கள்.

அவர்களும் நாமும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனபதால்தான் நாம் சூத்திரர்களாகிறோம். ஆகவே, நம் கூட்டத்திலிருந்து அவர்களை விலக்கிப் பேசித்தான்,
நம்மை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நம்மில் தமிழன் என்று சொல்லும் ஏமாளிகளைத்தான் பார்ப்பனர்களால் ஏமாற்ற முடியுமேயொழிய – ‘திராவிடர்’ என்றால் அவர்களால் ஏமாற்ற முடியாது.”

பெரியார் – விடுதலை 05.10.1948

குடிஅரசு இதழ் தொகுப்பு

எழுத்தாளர்: பெரியார் திராவிடர் கழகம் பிரிவு:மின்னூல்கள் 
வெளியிடப்பட்டது: 02 ஜூலை 2010

குடிஅரசு இதழ் தொகுப்பு

1983 ஆம் ஆண்டில் தொகுத்து 2003 ஆம் ஆண்டுவரை 20 ஆண்டுகளாக தோழர் வீரமணி அவர்களால் முடக்கிவைக்கப்படிருந்த குடி அரசு இதழ்கள் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 2003 ஆம் ஆண்டில் (1925 குடி அரசு) வெளியிடப்பட்டது. 1925 முதல் 1938 வரையிலான 28 தொகுதிகளை மொத்தமாக 2008 ஆம் ஆண்டு பெரியார் தி.க வெளியிடத் தயாரானபோது பெரியார் சிந்தனைகள் வெளிவராமல் தடுக்க தன்னால் ஆன எல்லாவகையான காரிய்ங்களையும், சட்டரீதியான காரியங்களையும் செய்து பார்த்தார் தோழர் வீரமணி. பொறுமையாகக் காத்திருந்தோம். 

உயர்நீதிமன்றம் தோழர் வீரமணியிடமிருந்து பெரியாரை விடுதலை செய்துள்ளது. நீதிபதி சந்துரு அவர்கள் குடி அரசை பெரியார் தி.க வெளியிட எந்தத் தடையும் இல்லை என தீர்ப்பு கொடுத்தார். அதையும் எதிர்த்து வீரமணி மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடும் நியாயமில்லை. பெரியார் திராவிடர் கழகம் குடி அரசு தொகுப்புகளை வெளியிட எந்தத் தடையும் இல்லை என இன்று (09.06.2010) மாண்பமை நீதியரசர்கள் இப்ராகிம் கலிஃபுல்லா, கிருபாகரன் ஆகியோர் தீர்ப்பளித்திருக்கின்றனர்.

பெரியாரின் சிந்தனைகள் எவருக்கும் தனிப்பட்ட சொத்தல்ல. ஆனால் மீண்டும் தோழர் வீரமணி பெரியாரைத் தன் தனிப்பட்ட சொத்தாக்கி அதன் வழியாக தன் மகனுக்கு சொத்து சேர்த்துக் கொடுக்க எந்த எல்லைக்கும் போவார். எனவே பெரியாரின் கருத்துக் கருவூலங்களை - 2000 ஆவது ஆண்டிலிருந்து 2010 ஆம் வரை 10 ஆண்டுகளாக பெரியார் திராவிடர் கழகம் உழைத்து, தேடித் தேடி அலைந்து தொகுத்து அச்சிட்ட 28 தொகுப்புக்களை இலவசமாக அனைவருக்கும் அனுப்பி வைக்கிறோம். படித்து பாதுகாத்து வையுங்கள். பல இலட்ச ருபாய் பொருள் நட்டம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அச்சிட்ட தொகுப்புகள் விற்பனை ஆகாவிட்டாலும் பரவாயில்லை. பெரியார் கருத்துக்கள் அனைவருக்கும் செல்லவேண்டும். அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பி வைக்கிறோம்.  படியுங்கள் - பரப்புங்கள் - வாழ்வில் கடைபிடியுங்கள்.

குடிஅரசு 1925 தொகுப்பு முன்னுரை
குடிஅரசு 1925 தொகுப்பு

குடிஅரசு 1926 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1926 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1927 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1927 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1928 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1928 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1929 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1929 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1930 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1930 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1931 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1931 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1932 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1932 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1933 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1933 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1934 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1934 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1935 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1936 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1936 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1937 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1937 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1938 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1938 தொகுப்பு பகுதி 2

ரிவோல்ட் ஆங்கில நூல் தொகுப்பு

பெரியார் திராவிடர் கழகம்

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/9820-2010-07-02-06-13-51

Friday, March 9, 2018

தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி

Suriya Moorthy

மாநில சுயாட்சி குறியீட்டு முயற்சி
.
கன்னட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கர்நாடக மாநிலத்திற்கான தனிக்கொடி குறித்து ஆய்வு செய்ய ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தார் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா என்கிற செய்தி தான் 2017 ஆகஸ்ட் 7 அன்று ஊடகங்களின் முக்கிய செய்தி.. மாநில சுயாட்சி குறித்து தேசிய கட்சியின் முதல்வர் ஒருவர் தீவிரமான நடவெடிக்கை எடுக்க துணிந்தது பலருக்கு ஆச்சர்யம் அளித்தது. எதிர்பார்த்தது போலவே ஒன்பது பேர் குழு பிப்ரவரி 6 2018 அன்று முதல்வர் மூலம் அமைச்சரவைக்கு அறிக்கையை சமர்பித்தது, தாமதம் ஏதுமின்றி இரண்டே நாளில் 8ம் தேதி கர்நாடக மாநிலத்திற்கான தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார் சித்தராமைய்யா
.
அறிமுகப்படுத்தியதே  மிகப்பெரிய சாதனை என்பது ஒருபுறமிருந்தாலும், மாநில அரசுக்கு தனிக்கொடியை அறிவிக்க சட்டபூர்வ உரிமை இல்லை என்பதால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே அந்த கொடி சட்டப்படி கர்நாடக மாநிலத்தின் அதிகாரப்பூர்வ கொடியாகும், நாடாளுமன்றமும் குடியரசு தலைவரும் ஒப்புதல் அளிக்கும்வரை அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடையாது. கொடியை அறிமுகப்படுத்திய பின்னர் சித்தராமைய்யா பேசிய வார்த்தைகள் கவனிக்க தகுந்தவை.. இந்த கொடி குறித்த முடிவினை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்து அழுத்தம் கொடுப்போம், கொடிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம் என்று ரத்தின சுருக்கமாய் அவர் சொல்லி நகர்ந்தாலும்.. மெட்ரோ நிலையங்களில் இந்தி எழுத்துக்களுக்கு தார்பூசியதில் தொடங்கி இந்தி எதிர்ப்பு குழு அமைத்தது வரை கன்னடிகர்களிடம் ஏற்பட்டுள்ள இன உணர்வை முன்வைத்து தேர்தலை மையப்படுத்தி பாஜகவிற்கு செக் வைத்துள்ளார் என்பதே அவர் கொடியை அறிமுகப்படுத்திய காலம் உணர்த்தும் செய்தி
.
கர்நாடகாவே தனிக்கொடி அறிவித்து விட்டது, மாநில சுயாட்சியின் வேர் நிலம் தமிழ்நாடு இதுகுறித்து சிந்திக்கவே இல்லையா என்று நினைக்கலாம் ஆனால் சற்றேறக்குறைய ஐந்து சதாப்தங்களுக்கு முன்னரே தமிழ்நாட்டிற்கான தனிக்கொடியை அறிமுகப்படுத்தி இந்திய ஒன்றியத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டார் கலைஞர், அண்ணா மறைவுக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற கொஞ்ச நாளிலேயே அண்ணா கண்ட மாநில சுயாட்சிக்கு வடிவம் கொடுக்க ராஜமன்னார் தலைமையிலான குழு குறித்த அறிவிப்பை 17/03/1969 அன்று டெல்லியில் அமர்ந்துகொண்டு அறிவித்து டெல்லியை நடுங்கவைத்தவர் அல்லவா அவர்.. அவர் செய்யாமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம்
.
இந்திய அரசியலமைப்பு அவையில் (constitutional assembly) இந்திய ஒன்றியத்திற்கான தேசிய கொடி குறித்த விவாதத்திலேயே தனிக்கொடிகள் குறித்த கோரிக்கைகள் எழுந்ததுண்டு, ஜார்கண்ட் பழங்குடியினத்தை சேர்ந்த ஜெயபால் சிங் முண்டா என்பவர், பல்வேறு பழங்குடிகள் அவர்களின் கலாச்சார அடையாளமாக தங்களுக்கேயான பிரத்யேக கொடிகளை பயன்படுத்துகின்றனர் ஆகவே தேசிய கொடியோடு இணைத்து பழங்குடிகள் தங்களின் கொடிகளையும் பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி வழங்க வகை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். விவாத நிலையிலேயே அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, அதற்கு பின்னர் 1947 ஜூன் 22 அன்று இந்திய ஒன்றியத்திற்கான அரசியலமைப்பு அவைக்கு தேசிய கொடியினை அறிமுகப்படுத்தினார் நேரு ஆக இந்திய ஒன்றியத்திற்கான ஏக கொடியாக மூவர்ண கொடி மாறியது
.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேருவின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுமூக தீர்வு எட்டப்பட்டு அரசியலமைப்பு சிறப்பு பிரிவு 370 காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கியது. அதை தொடர்ந்து விவசாயிகளின் பெருமையை குறிக்கும் பொருட்டு கலப்பை படத்தோடு கூடிய தனிக்கொடிக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.. அன்று தொடங்கி இன்று வரை தனிக்கொடி உடைய ஒரே மாநிலம் காஷ்மீர் மட்டும் தான்.. எப்படி பார்த்தாலும் ஜெயபால் சிங் முண்டே கோரிக்கையும் சரி, காஷ்மீர் கொடியும் சரி இரண்டுமே சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்கு பின்னான உருவாக்க காலத்திலும் நடந்து முடிந்துவிட்டன ஆனால் கலைஞர் தனிக்கொடி கேட்ட காலம் அப்படி இயல்பான காலமாக இருக்கவில்லை
.
சுதந்திரம் பெற்று கால்நூற்றாண்டு காலம் நெருங்கிக்கொடிருந்தது, மொழிவாரி மாநில பிரிவினைகள் மேற்கொள்ளப்பட்டு இந்திய ஒன்றியம் ஏறக்குறைய அதன் இன்றைய வடிவத்திற்கு வந்திருந்தது, அரசியல் ஆட்சி கட்சிகள் என்று எல்லாமே ஒரு நிலையான வலுவான இடத்தில் இருந்தன, அப்படிப்பட்ட 70களில் தான் மாநிலக்கொடி என்ற துணிச்சலான கோரிக்கையை வைத்தார் அன்றைய முதல்வர் கலைஞர்
.
அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளது போல பிராந்தியங்களுக்கு தனிக்கொடி வேண்டும், 25 பிராந்தியங்களை உள்ளடக்கிய ஸ்விட்சர்லாந்து எல்லா பிராந்தியங்களுக்கும் தனிக்கொடி வைத்திருக்கிறது, இத்தனைக்கும் அங்கே பிராந்தியங்களுக்கான சராசரி மக்கள் தொகையே 25000 வரை தான் என்று அவர் காரணங்களை அடுக்கி கொடி கேட்டபோது இந்திய ஒன்றியத்தின் பிற பிராந்தியங்கள் சற்று ஆடித்தான் போயின
.
1970 ஆகஸ்ட் 20 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, அமெரிக்கா போன்ற நாடுகளை சுட்டிக்காட்டி இதுகுறித்து மாநில முதல்வர்களிடம் கருத்து கேட்கப்படும் என்று அறிவித்தார்.. ஏக இந்தியா மீது பற்றுள்ள எல்லா தரப்பும் கொந்தளித்தது.. இன்றைய கார்நாடகத்தின் அன்றைய முதல்வர் (மைசூரு மாநிலம்) வீரேந்திர பாட்டில், மத்திய அரசு இந்த கோரிக்கையை உடனடியாக நேரிடையாக நிராகரிக்க வேண்டும் என்று முழங்கினார். ராஜஸ்தானை சேர்ந்த மோகன்லால் சுக்காடியா, ஒரிசாவின் ஆர்.என்.சிங் டியே ஆகியோர் இந்திய ஒற்றுமைக்கு பங்கம் விளைக்கும் நடவடிக்கை என்று எச்சரித்தனர், ஆந்திர எம்.பி தென்னட்டி விஸ்வநாதன் தேசிய கொடியின் ஒரு சிறுபகுதியில் மாநில அரசுகளின் சின்னங்களை அனுமதிக்கலாம் என்ற யோசனையை சொன்னார் இப்படி பெரும் எதிர்ப்பும், சின்ன சின்ன ஆதரவுகளும் (அதுவும் மாற்று யோசனைகளோடு) வந்துகொண்டிருந்த சூழலில் கலைஞரின் இந்த கோரிக்கையை முழுமையாக ஆதரித்தத்தோடு, இது இந்திய தேசியக்கொடியை அவமதிக்கும் செயல் அல்ல என்று உரக்க சொன்னவர் பஞ்சாபின் முன்னால் முதல்வர் குருநாம் சிங். 1969ல் காங்கிரஸ் இன்டிகேட் சின்டிகேட் என்று பிரிந்த நிலையில் ஸ்தாபன காங்கிரஸும், இன்றைய பாஜகவின் அன்றைய வேரான ஜனசங்கமும் இதை மிகக்கடுமையாக எதிர்த்தன
.
எதிர்ப்புகள் தீவிரமடைந்த சூழலில் கொடி விவகாரம் தொடர்பாக 25 ஆகஸ்ட் 1970 அன்று டெல்லியில் இந்திராகாந்தியை சந்தித்தார் கலைஞர், மாநிலத்திற்கான தனிக்கொடிக்கு அனுமதி வழங்க கேட்டுக்கொண்டார், அந்த சந்திப்பின்போது இந்திய தேசிய கொடியும் காங்கிரஸ் கொடியும் ஒன்றாய் இருப்பதால் தனியாக ஒரு கொடியை வடிவமைக்க வேண்டும் என்று முன்பொருமுறை ராஜாஜி சொல்லியதை நினைவுபடுத்தி அந்த அம்மையாருக்கு அதிர்ச்சி கொடுக்கவும் அவர் தவறவில்லை பிறகு என்ன நடந்ததென தெரியவில்லை.. இரண்டு நாட்களுக்கு பிறகு டெல்லியில் 1927 ஆகஸ்ட் 27 அன்று செய்தியாளர்களை சந்தித்தவர் தமிழ்நாட்டிற்கான தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார், மூன்று மாதங்களில் முடிவு சொல்வதாய் சொன்ன இந்திராகாந்தி பின்னர் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்று சொன்னபோதும் தொடர்ந்து அந்த கோரிக்கையை வைத்துக்கொண்டே இருந்தார்
.
1974 ஆம் ஆண்டு மாநில முதல்வர்களுக்கான கொடியேற்றும் உரிமையை அவர் பெற்றுத்தர பின்னணியிலிருந்தது 71ல் அவர் வைத்த தனிக்கொடி கோரிக்கை என்பது மறுப்பதற்கில்லை.. 48 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு முயன்றதை இன்று கர்நாடகா முயல்கிறது. வெற்றி பெற வாழ்த்துவோம்

சூரியமூர்த்தி

#history #stateflag

https://m.facebook.com/story.php?story_fbid=2068297513389381&id=100006274564260

பெரியார் vs அமித்ஷா

ஆழி செந்தில் நாதன்

இன்று மின்னம்பலம்.காமில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் பாஜக வெல்லுமா?
திராவிடக் கட்சிகளை ஏன் தோற்கடிக்க முடியவில்லை?

திமுக - அதிமுகவுக்கு மாற்று எனக் கிளம்பிவருகின்ற கட்சிகள் ஏன் அவற்றின் ஜூனியர் பார்ட்னர்களாக மாறிவிடுகின்றன?

50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் வியூகத்துக்கும் பெரியாரின் பார்ப்பனரல்லாதோர் அடையாளத்துக்கும் இடையில் என்ன தொடர்பு?

-  இப்படி பல கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் அளிக்க முயன்றிருக்கிறேன்.

அமித் ஷாவின் சோஷல் இஞ்சினியரிங் பலருக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் இதில் திராவிடக் கட்சிகள் இதில் பிஎச்டி வாங்கியவை. அமித் ஷா சந்திக்கப்போகும் வாட்டர்லூ தமிழ்நாட்டில்தான் என்று ஏன் நம்மால் உறுதியாகச் சொல்லமுடியும் -  இப்படி பலக் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன்.

ஏன் பெரியாரை இந்துத்துவவாதிகளாலும் திராவிடக் கட்சிகளின் பரம வைரிகளாலும் ஏற்கமுடியாது என்பதற்கான யதார்த்தம் இங்கேதான் நிற்கிறது.

திராவிடக் கட்சிகளின்/பெரியாரின் தாக்கத்தைக் குறைத்துமதிப்பிடும் போக்கு இப்போது அதிகரித்துவருகிறது. உண்மையிலேயே திராவிடக் கட்சிகளைத் தாண்டி. அவற்றைவிட சிறந்த அரசியலை முன்னெடுப்போம் என்று முயற்சி செய்பவர்கள்கூட நம்கால வரலாற்றையை சரியாக புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

யதார்த்தத்தில் நின்று நான் எழுதியக் கட்டுரை. படியுங்கள்.

https://minnambalam.com/k/2018/03/09/41

https://m.facebook.com/story.php?story_fbid=10157155077864046&id=612219045

மகளிர்தினம் ஓர் இஸ்லாமிய பார்வை

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*மகளிர்தினம் ஓர் இஸ்லாமிய பார்வை.*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

 👉 *பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிரோடு புதைத்த காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் ஒரு ஆட்டை அறுத்து விருந்து கொடுக்கச் சொன்ன மார்க்கம்.*

👉 *மூன்று பெண் குழந்தைகளை பெற்று அவர்களை கண்ணியமாக வளர்த்து, நல்ல முறையில் திருமணம் முடித்துத்தரும் பெற்றோர்கள், சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்கள் என்று நன்மராயம் கூறியவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*

 👉 *வாழும் உரிமையே மறுக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை தந்த மார்க்கம் இஸ்லாம்.*

  👉 *பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடத்தக்கூடாது என்று தடை விதித்த இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*

👉 *திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுத்தப்படும் ஒரு ஒப்பந்தமே அன்றி மனைவி என்பவள் கணவனின் அடிமையல்ல என்று சட்டம் இயற்றிய மார்க்கம் இஸ்லாம்.*

  👉 *வரதட்சணை எனும் பகல் கொள்ளையைத் தடுத்து பெண்ணுக்கு மஹர் எனும் திருமண நன்கொடையை மாப்பிள்ளை தர வேண்டும் என்று கட்டளையிட்ட மார்க்கம் இஸ்லாம்.*

  👉 *தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்று தாய்மைக்கு பெருமை சேர்த்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*

   👉 *உங்கள் மனைவியிடத்தில் யார் சிறந்தவரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று உபதேசித்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*

 👉 *மனைவியின் மீது கணவனுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் கணவன் மீது மனைவிக்கும் உள்ளது என்று பெண்களின் உரிமையை நிலைநாட்டியது இஸ்லாம்.*

👉 *கணவனை இழந்த பெண்கள் சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்தி விதவைகளுக்கு மறுதிருமணம் செய்ய வலியுறுத்தியவர் இறைத்தூதர் முஹம்மத் (ஸல் ).*

👉 *வெறும் காட்சி பொருளாக பார்த்து ரசிக்கும் கயவர்களுக்கு மத்தியில், கண்ணியமான ஆடை (பர்தா) அணிய கற்றுத்தந்ந மார்க்கம் இஸ்லாம்.*

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*இங்கு மகளிர்க்கு என்று ஒரு நாள் இல்லை.*

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
  *ஒவ்வொரு நாளிலும் அவர்கள் மதிக்கப்பட வேண்டும்.*🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*மகளிர்தினம் ஓர் இஸ்லாமிய பார்வை.*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

 👉 *பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிரோடு புதைத்த காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் ஒரு ஆட்டை அறுத்து விருந்து கொடுக்கச் சொன்ன மார்க்கம்.*

👉 *மூன்று பெண் குழந்தைகளை பெற்று அவர்களை கண்ணியமாக வளர்த்து, நல்ல முறையில் திருமணம் முடித்துத்தரும் பெற்றோர்கள், சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்கள் என்று நன்மராயம் கூறியவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*

 👉 *வாழும் உரிமையே மறுக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை தந்த மார்க்கம் இஸ்லாம்.*

  👉 *பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடத்தக்கூடாது என்று தடை விதித்த இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*

👉 *திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுத்தப்படும் ஒரு ஒப்பந்தமே அன்றி மனைவி என்பவள் கணவனின் அடிமையல்ல என்று சட்டம் இயற்றிய மார்க்கம் இஸ்லாம்.*

  👉 *வரதட்சணை எனும் பகல் கொள்ளையைத் தடுத்து பெண்ணுக்கு மஹர் எனும் திருமண நன்கொடையை மாப்பிள்ளை தர வேண்டும் என்று கட்டளையிட்ட மார்க்கம் இஸ்லாம்.*

  👉 *தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்று தாய்மைக்கு பெருமை சேர்த்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*

   👉 *உங்கள் மனைவியிடத்தில் யார் சிறந்தவரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று உபதேசித்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*

 👉 *மனைவியின் மீது கணவனுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் கணவன் மீது மனைவிக்கும் உள்ளது என்று பெண்களின் உரிமையை நிலைநாட்டியது இஸ்லாம்.*

👉 *கணவனை இழந்த பெண்கள் சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்தி விதவைகளுக்கு மறுதிருமணம் செய்ய வலியுறுத்தியவர் இறைத்தூதர் முஹம்மத் (ஸல் ).*

👉 *வெறும் காட்சி பொருளாக பார்த்து ரசிக்கும் கயவர்களுக்கு மத்தியில், கண்ணியமான ஆடை (பர்தா) அணிய கற்றுத்தந்ந மார்க்கம் இஸ்லாம்.*

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*இங்கு மகளிர்க்கு என்று ஒரு நாள் இல்லை.*

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
  *ஒவ்வொரு நாளிலும் அவர்கள் மதிக்கப்பட வேண்டும்.

Thursday, March 8, 2018

பெரியார் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?

தந்தை பெரியார் யார் ?? அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என நக்கலாய் பேசுபவர்களுக்காகவும், வெறும் கடவுள் மறுப்பு மட்டும்மே பெரியாரின் கொள்கை என்று சொல்லுபவர்களுகாகவும் சில தகவல்கள்..........

1. தான் வகித்த 29 பதவிகளை துறந்து பதவிகள் ஏதுமின்றி 60 ஆண்டுகளுக்கு மேலாய், தனது 94 ஆம் வயதுவரை மக்கள் பணியில் ஈடுபட்டவர்.

2. செல்வக் குடும்பத்தில் பிறந்தும் (1900 ஆம் ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு பெரியார் அதிபதி)  சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காய் தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை மக்களுக்கே விட்டுச் சென்றவர்.

3. மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை அரசியல் கட்சியாய் மாற்றாதவர், அரசியலில் இல்லாமலேயே மக்கள் பணி செய்தவர்.  தனது வாழ்நாளில் ஏறக்குறைய 8200 நாட்கள் சுற்றுபயணம் செய்து சுமார் 11,000 நிகழ்ச்சி/கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியவர். முதிர்ந்த வயதிலும், சிறுநீரக பாதிப்பால், மூத்திர வாளியை கையோடு பிடித்துகொண்டு சுற்றுபயணம் செய்து கூட்டங்களில் பேசியவர்.

4. அக்காலத்திலேயே விதவை மறுமணத்தை ஆதரித்தவர், பெண் கல்வியை வலியுறுத்தியவர், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கவேண்டும் என்று சொன்னவர். 

5. மனிதன் அனைவரும் சமம் அவனுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிரிவினை இருக்கக் கூடாது என ஜாதியத்தை கடுமையாய் எதிர்த்தவர்.

6. ஜாதிகள் மதத்தினால் தான் தோன்றுகின்றன எனவே மதத்தை தூக்கி எறிந்தவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொன்னவர்.

7. இல்லாத கடவுளையும் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் சொல்லி, மதங்கள் மனிதர்களை மூடனாக்குகிறது என்பதை உரக்கச் சொன்னவர். அவர் வாழ்ந்த அந்த காலத்தில், மதத்தின் பெயரால், குறிப்பிட்ட சமூக மக்கள், பிற சமூக மக்களின் மீது செலுத்திய ஆதிக்கத்தை, மதத்தின் பெயரை சொல்லிக்கொண்டு அவர்கள் மட்டுமே அனுபவித்த சலுகைகளை, கண்டு கொதித்துதான் பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையை தீவிரமாக பேசினார்..

8. ஆடம்பரங்கள் இல்லாத எளிமையான பகுத்தறிவுவாதி, பல பத்திரிகைகளையும் இதழ்களையும் நடத்தியவர்.

9. மக்களுக்கு பிடித்தமான மதத்தை எதிர்த்து மக்களின் விரோதத்தை சம்பாதித்தவர், மக்களோடு ஒத்து ஊதி அரசியல் பண்ணத் தெரியாதவர். மக்களுக்கு பிடித்ததை செய்வதை விட தேவையானதை செய்ய முனைந்தவர்.

10. "பெரியார், புதிய உலகின் தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி..."  என்று ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பால் பாராட்டப்பட்டவர்...

11. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என கர்ஜித்தவர். பக்தி வந்தால் புத்தி போய் விடும், புத்தி வந்தால் பக்தி போய் விடும் என தத்துவம் பேசியவர்.

12. தம் இயக்கத் தோழர்களை சாதி மறுப்பு - மத மறுப்பு - விதவை மறுமணம் செய்து கொள்ள ஆதரவளித்தவர்.

13. பெண்ணுரிமைப் போராளி, கணவனுக்கு இல்லாமல் மனைவிக்கு மட்டும் ஏன் தாலி எனக் கேட்டு ஆண் சமூகத்தை அதிரச் செய்தவர். பெண்களை அடிமைபடுத்தும் தேவதாசி முறையை ஒழிக்க அரும்பாடுபட்டவர். "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற புத்தகத்தை எழுதியவர் பெரியார்.

14. பெரியாரிடம் பலர் உங்கள் எல்லாக் கொள்கையும் பிடித்திருக்கிறது கடவுள் மறுப்பைத் தவிர என சொல்லிய போது, கை நல்லா இருக்கு கால் நல்லா இருக்கு மூக்கு முழி எல்லாமே நல்லா இருக்கு உயிர் மட்டும் தான் பிடிக்க வில்லை எனச் சொல்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது என பதிலளித்து அவர்களின் வாயை அடைத்தவர்.

15. நீ உணரும் பசியை நானும் உணர்கிறேன், அதனால் பசி இருக்கிறது என ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நீ உணரும் கடவுளை என்னால் உணர முடியவில்லை அதனால் கடவுளை மறுக்கிறேன் என கடவுள் மறுப்புக்கு விளக்கம் சொன்னவர்.

16. தமிழ் எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தவர், பரணில் போடப்பட்டு, மறைக்கப்பட்டு இருந்த திருக்குறளை தொடர்ச்சியாக "திருக்குறள் மாநாடுகள்" நடத்தி, பொதுமக்களிடம் திருக்குறளை கொண்டு போய் சேர்த்தவர் தந்தை பெரியார். கர்நாடக இசை என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு & சம்ஸ்கிருத சங்கீதத்துக்கு எதிராக தமிழிசைக்கு மேடை அமைத்து ஆதரவளித்தவர் தந்தை பெரியார். 

17. ஹிந்தி மொழி திணிப்பை கடுமையாக எதிர்த்தவர்.. 1937 ஆம் ஆண்டில் அதற்காக பல போராட்டங்களை செய்து, சிறைக்கு சென்றவர். தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியவர் தந்தை பெரியார்.

18. மதுவிலக்கு கொள்கையை ஆதரித்து, தனது சொந்த தோட்டத்தில், ஏக்கர் கணக்கில் இருந்த தென்னை மரங்களை வெட்டிசாய்த்தவர்.

19. வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தியவர். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சட்ட ரீதியில் தடை வந்தபோது, கடுமையான போராட்டங்களை நடத்தி, இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில், முதல்  திருத்தத்தமாக,  இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான சட்டத்தை கொண்டுவர வழிவகுத்தவர். அந்த சட்ட திருத்தத்தால் தான், இப்போது நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட & OBCக்கான இடஒதுக்கீடு சட்டப்படி செல்லுபடியாகிறது..

20. இந்தியாவில் வெறும் 5% சதவீதம் மட்டும் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள், நாட்டின் 90% அரசு வேலைகளையும், படிப்புகளையும் ஆக்கிரமித்திருந்ததை மாற்ற, சமூக, கல்வி, வேலைவாய்ப்பில் புறகணிகப்பட்ட பெரும்பான்மையான, பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட & தலித் மக்கள் தங்களின் உரிமையான இடஒதுக்கீட்டை சட்டப்படி பெற வழிவகுத்தவர் தந்தை பெரியார்..  

தந்தை பெரியாரின் பொன்மொழிகள் சில...

1. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

2. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி

3. மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்

4. விதியை நம்பி மதியை இழக்காதே.

5. மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.

6. மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.

7. பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.

8. பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.

9. பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

10. தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்

11. கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

12. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.

13. ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

14. ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.

15. ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

16. என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.

17. எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.

18. மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்

19. வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

-- தந்தை பெரியார்