Thursday, July 25, 2024

ஜூம்மா துஆ

எனக்கு உயிரை மீட்டுகொடுத்து எனது உடலில் ஆரோக்கியத்தை அளித்து ஜுமுஆ நாளில் அவனை திக்ரு செய்ய அனுமதியளித்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

யா அல்லாஹ்! 
உம்மீ நபியான முஹம்மது  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியையும் சலவாத்தையும் பொழிவாயாக

என் இரட்சகனே! 
* நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! 
* இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக.

யா அல்லாஹ்
* தேவையுடையவர்களின் மீது உன் ரிஜ்கை மழையாக பொழிவாயாக!
* நோயுற்றிருப்போரின் மீது ஆரோக்கியத்தை மழையாக பொழிவாயாக!
* பாவமன்னிப்புத் தேடுவோரின் மீது உனது மன்னிப்பை மழையாக பொழிவாயாக!
* அநீதி இழைக்கப்படுவோரின் மீது உனது உதவியை மழையென பொழிவாயாக

யா அல்லாஹ் 
* நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன். 
* கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! 
* என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக. 
* வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.  

யா அல்லாஹ்
* எனது ஈமானை அதிகரிக்க உன்னிடம் வேண்டுகிறேன்.
* எனது ஆயுளில் அபிவிருத்தியையும் ,
* எனது உடலில் ஆரோக்கியத்தையும்,
* எனது வாழ்வாதாரங்களில் விசாலத்தையும், 
* மவ்த்திற்கு முன் உன்னிடம் பாவமன்னிப்பைக் கேட்பதையும்,
* மரணம் ஏற்படும் வேளையில் ஷஹாதத்தையும்,
* மவ்த்திற்குப் பின் உன்னுடைய மஃபிரத்தையும்,
* கேள்வி கேட்கும் நேரத்தில் பொது மன்னிப்பையும்
* நரக வேதனையிலிருந்து பாதுகாப்பையும்,
* சுவனம் செல்லும் நல்வாய்ப்பையும்,
உன்னிடம் இறைஞ்சுகிறேன்.

யாஅல்லாஹ்
* உனது சங்கைக்குறிய முகத்தைக்
காணும் பாக்கியத்தை எங்களுக்கருள்வாயாக!
* எங்களில் மறைந்தவர்களுக்கும்,
மறைந்த அனைத்து முஸ்லிம்களுக்கும்
கருணை காட்டுவாயாக!

ஆமீன்.

No comments:

Post a Comment