Tuesday, March 6, 2018

1967 திமுக வெற்றி - வரலாற்று சாதனை ஏன்

தசக்கிரீவன்
Via facebook
2018-03-06

1967 காங்கிரசின் எதேச்சதிகார மக்கள் விரோத இருண்ட கால ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்க தமிழக மக்களை காக்க அரசியல் களத்தில் திமுக எவ்வளவு போராடி வென்றது என்பதை சொல்கிறேன் கேள் தம்பி..

தமிழகத்தில் மக்கள் உணவிற்கே வழி இன்றி வரலாறு காணாத பஞ்சம் தலைவிரித்தாடிய போதும் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி, தியாகிகள் நிறைந்த கட்சி, இந்தியா என்ற தனி நாடு உருவாக காரணமாக இருந்த கட்சி, ஜமீன்தார்களையும், மிராசுதார்களையும், செல்வந்தர்களையும், தொழிலதிபர்களையும் ஒருங்கே பெற்ற கட்சி, மத்திய அரசிலும், இந்தியாவில் கேரளா நீங்களாக அனைத்து மாநிலங்களிலும் 15 ஆண்டுகளாய் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் விண்ணுயரும் அதிகாரம் கொண்ட அசுர பல கட்சி என்ற மிதப்பில் 1967ல் தமிழகத்தில் தனித்து தேர்தலை சந்தித்தது காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி.

1967 வரை 50 சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்டு தமிழகத்தின் எதிர்கட்சியாய் இருந்த திமுக 1967 பொது தேர்தலில் தன் அயராத உழைப்பை வெளிப்படுத்தினால் இன்னும் சில சட்ட மன்ற உறுப்பினர்களை கூடுதலாக பெற முடியும் என்று அரசியல் ஆர்வலர்கள் பரவலாய் கருத்து தெரிவித்து இருந்த போதும், தானும் தன் கட்சி உறுப்பினர்களும் சட்டமன்ற படி ஏறுவதை விட மக்களின் துயர் துடைக்க இன்னல் நீக்க படி அரிசி திட்டத்தை காமராஜர் தலைமையிலான காங்கிரசர் அரசு கொண்டுவந்தால் திமுக இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று சாமானிய மக்களின் நலனுக்காய் அறிவித்தவர் அண்ணாவடா தம்பி.

ஆனால் சாமானிய மக்களின் நலனை பற்றி கிஞ்சித்தும் கவலை படாத காமராசர், பகதவச்சலும் உள்ளிட்ட ஜமீன்தார்களுக்கான தலைவர்கள் ஒரே குரலில் உங்களால் முடிந்தால் படி அரிசி திட்டத்தை செய்து காட்டுங்கள் பார்க்கலாம் என்று பேரறிஞரை பார்த்து எள்ளி நகையாடினர். இவர்களின் இந்த ஏளன பேச்சு தான் திமுகவை கோட்டையில் அமர்த்த அண்ணாவை உந்தும் சக்தியாக இருந்தது என்றால் அது மிகை இல்லை தம்பி.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் நீங்கலாக அனைத்து கட்சிகளுடனும் கட்சிகள் என்று சொல்வதைவிட அனைத்து தரப்பு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் ஒருங்கிணைத்து அன்று வரை இந்திய வரலாற்றில் யாரும் கண்டிராத மற்றும் காங்கிரசுக்கு எதிராய் யாரும் முன்னெடுக்காத மிகப் பெரிய கூட்டணியை பேரறிஞர் தமிழகத்தில் உருவாக்கினார். "முடிந்தவரை கரும்புச் சாறு சிந்தாமல் பிழிந்துவிட்டேன். அதற்கு மேலும் சாறு இருந்தால் ஈக்களுக்கு உணவாகட்டும் என்று விட்டுவிட்டேன்’’ என்றார் . அதை "கூட்டுறவு" என்றும் அறிவித்தார் அண்ணா.

வேறு வேறு இலக்கு, லட்சியம், விடாப்பிடிவாதம் கொண்ட பலரை இணைத்து அமைத்த கூட்டணிக்குக் கொள்கையே இல்லை. மக்களை ஏமாற்றும் வேலை. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று காமராசரும், காங்கிரசாரும் தெருத் தெருவாய் பிரசாரம் செய்தனர்.

‘ஒன்றுபட்ட கொள்கை உண்டு, அதுதான் எதேச்சதிகார காங்கிரஸை வீழ்த்துவது’ என்று கமராசரை பார்த்து கர்ஜித்தார் அண்ணா. இதோடு நிறுத்தினாரா இல்லையே சாமானிய மக்களுக்கான திடங்களாக முதன்முதலில் அண்ணா அறிவித்தது என்ன தெரியுமா தம்பி?

”ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி அரிசி நிச்சயம்” என்றார் அண்ணா. அரிசி வைத்திருக்க தடை வித்த காமராசரின் காங்கிரஸ் அரசின் மீதான கோபத்தில் கொதித்து கொண்டிருந்த சோற்றுக்கே வழி இன்று சாக கிடந்த மக்கள் மனதில் அண்ணாவின் படி அரிசி திட்ட அறிவிப்பு திமுக சாமானிய மக்களுக்கான கட்சி என்ற மிக பெரும் நம்பிக்கையை கொடுத்தது மட்டும் இன்றி காமராசரின் காங்கிரஸ் கட்சி பெரு முதலாளிகளுக்கான கட்சி என்ற உண்மையை மக்கள் உணர செய்தது என்றால் அது மிகை இல்லை தம்பி.

👉 பக்தவத்சலம் அண்ணாச்சி...
பருப்பு விலை என்னாச்சு?’,

👉 ‘காமராசர் அண்ணாச்சி...
கடுகு விலை என்னாச்சு?’

என்ற காங்கிரஸ் அரசுக்கு எதிரான தி.மு.கவினரின் இந்த இடி முழக்கம் தமிழகம் எங்கும் விண்ணதிர ஒலித்தது. இதற்கு மக்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர்கள் பதில் சொல்ல முடியாமல் திண்டாடினர்.

சாமானிய மக்களை பற்றி கவலை படாமல் பணபலம், ஆட்சி அதிகார பலம், இன்று போலவே அன்றைக்கும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான ஊடக பலம் இவற்றை மட்டுமே நம்பிய காமராசரின் காங்கிரஸ் அரசு திமுகவிற்கு எதிராய் செல்வ செழிப்பு மிக்க வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை எதிர் கொண்டது. பஞ்சம், பசி, பட்டினியில் மக்கள் தவித்து கொண்டு இருந்த சூழலில் திமுக அமைத்த தேர்தல் கூட்டணியை கிண்டல் செய்யும் விதமாக விகடன் பத்திரிக்கை

★ "அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கழுதையில் சவாரி செய்வது போல்" ஒரு ஒரு கேலிசித்திரம் வெளியிட்டது. இந்த கேலிச்சித்திரத்தை சுவரொட்டிகளாக மாற்றி தமிழகம் முழுவதும் காமராசரின் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து மக்களிடம் வாக்குகளை கேட்டது. ஒருபுறம் மக்கள் பஞ்சத்தில் சாகும் கொடுமை நடந்து கொண்டு இருக்க இந்த "விகடன்" காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக கருத்தை பரப்புகிறதே என்று திமுக உள்ளிட்ட அனைத்து கூட்டணி தலைவர்களுமே புலம்பி கொண்டிருக்க திமுகவின் முன்னணி தலைவர் ஒருவரின் குரல் விண்ணதிர ஒலித்தது!.

“எவ்வளவு நாளைக்கு இந்த அதிகாரம் செய்யமுடியும் ஆட்சியாளர்களே! அதிகாரிகளே! எண்ணிக்கொள்ளுங்கள் இன்னும் ஆறே நாள்! ஆட்சி மாறும்! அதிகாரமும் மாறும்!"
என்று பிப்ரவரி 1967ல் முழங்கினார் அவர். ஆம் அவர் தான் அவரே தான் இன்று வரை இந்திய அரசியலை தன்னை சூற்றியே சூழல விடும் தென்னகத்தின் சூரியன் #கலைஞர்_மு.கருணாநிதி.

◆ "படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்” என்றது காங்கிரசர்

◆ " நீங்கள் படுப்பது நிச்சயம், ஜெயிப்பது கடினம்" என்றது திமுக

◆ "5லட்சம் செலவுசெய்தால் அணணாதுரையையே தோற்கடிப்போம் " என்றார் காமராசர்.

◆ " மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்" என்றது திமுக.

◆ "கழுதை மீது எரியா கோட்டையை பிடிக்க முடியும்" என்று விகடன் உதவியோடு கேலி பேசியது காங்கிரசர்.

◆ " கோட்டையை பிடிக்க கழுத்தை தேவை இல்லை. மக்கள் தான் தேவை" என்றது திமுக.

இவ்வளவு அரச எதிர்புகளையும், செல்வந்தர்களின் பண பலத்தையும், ஊடகங்களின் விஷம பிரச்சாரத்தையும் மீறி. ‘எப்படியாவது வென்றாக வேண்டும்’ என்ற அண்ணாவின் தம்பிகளின் துடிப்பு, கண்துஞ்சாத உழைப்பாய் மாற மக்கள் செல்வாக்கோடு திமுக 137 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தது.

எந்த விகடன் திமுக தலைவர்கள் "கழுதையில் செல்வதாய்" கேலி சித்திரம் வரைந்ததோ அதே விகடன் திமுகவின் வெற்றியை தொடர்ந்து "திமுக தனித்து போட்டியிட்டு இருந்தாலும் நிச்சயம் ஆட்சியை பிடித்தே இருக்கும் " என்று தன் தலையங்கத்தில் எழுதியது.

“அண்ணா போல தனியான ஒரு கொள்கையை ஏற்படுத்தி, அதன்பேரில் தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடித்தவர் உலகிலேயே லெனின் மட்டும்தான்” என்றும் தந்தை பெரியார் திமுகவின், அண்ணாவின் இந்த வெற்றியை புகழ்ந்தார்.

1967 திமுகவின் சட்டமன்ற தேர்தல் வெற்றி என்பது சாதாரண வெற்றி கிடைத்து. அது ஒரு சரித்திர வெற்றியடா தம்பி! ஆம்

இந்திய அரசியல் வரலாற்றில் அசுர பலத்துடன் இருந்த, சுதந்திரம் பெற்று தந்த கட்சி என்ற பிம்பத்தை தாங்கி நின்ற "தேசிய கட்சியை முதன் முதலில் வீழ்த்தி ஒரு மாநில கட்சி ஆட்சியை பிடித்தது இந்தியாவில் அதுவே முதல் முறை".

அது நிகழ்த்தது தமிழகத்தில் தான்.

அந்த சாதனையை செய்தது திமுக தான்.

நான் திமுககாரன் என்பதே எனக்கு பெருமையடா தம்பி.

வாழ்க வசவாளர்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=345091729317856&id=100014510952895

No comments:

Post a Comment