சிவசங்கரன் சரவணன்
Via facebook
2018-03-05
எம்பிபிஎஸ் சேர வேண்டுமென்றால் அதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும். இதுதான் தகுதி!
இப்படியொரு அயோக்கியத்தனமான நடைமுறை தமிழ்நாட்டிலும் இருந்தது! நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் அந்த நடைமுறை நீக்கப்பட்டது!
அந்த அயோக்கியத்தனத்துக்கு சற்றும் குறைவில்லாத ஒரு அயோக்கியத்தனம் தான் நீட்!
தமிழ்நாட்டில் 98 சதவீத மாணவர்கள் படிக்கிற சிலபஸை விட்டுவிட்டு வெறும் 2 சதவீத மாணவர்களுக்காக நடத்தப்படுகிற தேர்வு தான் நீட்!
நீட் டால் தரம் உயரும் என்று சொல்வதைப்போல ஒரு மோசடித்தனம் வேறு கிடையாது!
ஒரு ரயில்வே ஸ்டேஷனை தரம் உயர்த்தவேண்டுமென்றால் என்ன செய்யலாம்?
ஸ்டேஷனை சுத்தமாக பராமரிக்கலாம், ரயில்கள் வந்து செல்லும் நேரத்தை துல்லியமாக உறுதி செய்யலாம், ரயில் நிலையத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இதை மேம்படுத்தலாம். இதுதான் தரம் உயர்த்துவது. அதை விட்டுவிட்டு ரயில்வே ஸ்டேசனுக்கு யாரும் பேருந்திலோ டூ வீலரிலோ போகக்கூடாது, மாறாக கால் டாக்சி பிடித்து போனால் தான் ரயில்வே ஸ்டேஷன் தரம் உயரும் என்று சொன்னால் உங்களுக்கு சிரிப்பு வராதா?
ஆனால் நீட் விஷயத்தில் அதுதான் நடக்கிறது!
எம்பிபிஎஸ் சிலபஸ் ஒன்று தான். தமிழ்நாட்டில் ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ் சேருகிற அனைவரும் அந்த சிலபஸ் தான் படித்து பாஸ் ஆகி டாக்டராக வேண்டும். நீட் மூலம் வருகிறவருக்கும் அதே சிலபஸ் அதே தேர்வு முறை தான். ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் வருபவர் 40 மார்க் எடுத்தா போதும் நீட் முறையில் வருபவர் 50 மார்க் எடுக்கவேண்டும் என்று இருக்கிறதா கிடையாது! பிறகு நீட் டை ஒரு தரம் உயர்த்துகிற முறையாக சொல்வது மோசடித்தனம் அன்றி வேறென்ன?
தங்கை அனிதா இன்று எம்பிபிஎஸ் முதலாண்டு மாணவியாக பாடம் படித்துக்கொண்டிருக்க வேண்டியவர்! ஆனால் நீட் கொடுமையால் அவர் இன்று இல்லை..! அனிதா போல எத்தனை எத்தனை அனிதாக்கள் தங்கள் கனவை சிதைத்துவிட்டு மனம் புழுங்குவார்கள் என எண்ணிப்பாருங்கள்!
வேறு வழியில்லை என்ன செய்வது, அதனால் நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என்று சொல்வதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நீட்டுக்கு ஆதரவாக நீட்டி முழக்கும் யாராக இருந்தாலும் அடிப்படை நேர்மையோ, குற்ற உணர்ச்சியோ இல்லாத சாடிஸ்ட்டுகளே..!
#TNagainstNEET
https://m.facebook.com/story.php?story_fbid=1993371817358471&id=100000570177032
No comments:
Post a Comment